புதுடில்லி: அதானி குழுமம் மீது விசாரணை நடத்தக்கோரி பார்லிமென்ட் வளாகத்தில் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 2 நாட்களாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.,06) 3ம் நாள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இந்த நிலையில், அதானி குழுமம் மீது பார்லி., கூட்டுக்குழு விசாரணை அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரி பார்லி., வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்லிமென்ட் ஒத்திவைப்பு
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பார்லி., கூட்டத்தொடரின்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
வாசகர் கருத்து (23)
இவர்கள் ....கேண்டீனில் சப்பாத்தி பூரி.... வடை போண்டா...சாப்பிட்டு விட்டு ....காந்தி சிலை முன்பு அமர்ந்து இளைப்பாற வேண்டியது .....இதே இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.
நிச்சயமாக உயர் கட்ட விசாரணை வேண்டும்??? அதில் தீர்ப்பு எப்படி இருக்கும்??? முஸ்லீம் நேரு காங்கிரஸ் கைக்கூலிகள் இந்த அதானி குழுமத்தில் எவ்வளவு ஷேர் / பங்கு வாங்கியிருக்கின்றார்கள் என்று விளக்கமாக இருக்க வேண்டும் எல்லார் பெயருடனும். அந்த பங்கு வாங்க எப்படி பணம் கிடைத்தது இவர்களுக்கு என்று விளக்கமாக இருக்க வேண்டும். இப்படி ஒரு அறிவுப்பு வந்தால் இவர்கள் உடனே அடங்கிவிடுவார்கள்
உ.பி ஸ் கூவும் போதே அந்த அன்னிய கம்பெனி பங்குகளை விற்று வாங்கி பல்லாயிரக்கணக்கான கோடி சம்பாதித்து விட்டது. அவர்கள் பேச்சை நம்பிப் பொங்கும் உ.பி சுக்கு என்னவோ😪 அதே 200 தான் கூலி. பாவம்.
திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி தான்.... கத்தவும் முடியாது ஒழியவும் முடியாது.....
அடானியின் கடன் இந்திய துறைமுகங்கள் மற்றும் ஏர்போர்ட்டில் மீது போடப்பட்ட கடன்கள். அதனால் அரசே அடைப்பது தான் பங்குசந்தை நஷ்டத்தை குறைக்கும்.