ADVERTISEMENT
புதுடில்லி: மத்திய அரசு, ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படியை, 4 சதவீதம் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விலைவாசி உயர்வை ஈடு செய்ய, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்பட்டு, உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ௩௮ சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கடந்த முறை திருத்தமானது, செப்டம்பர் ௨௮ல் மேற்கொள்ளப்பட்டு, ஜூலை ௧ முதல் அமல்படுத்தப்பட்டது.

இது குறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலர் சிவகோபால் மிஷ்ரா கூறியதாவது:
தொழிற்சாலை பணியாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீடு, ௨௦௨௩, ஜன., ௩௧ல் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில், ௪.௨௩ சதவீதம் அகவிலைப்படி அதிகரிக்க வேண்டும். எனவே, அகவிலைப்படி உயர்வானது நான்கு சதவீதமாக இருக்கும். அதாவது, நடப்பு ௩௮ சதவீதத்தில் இருந்து ௪௨ சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த உயர்வு, ஜன., ௧ முதல் அமல்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (5)
பாவம்.. அவிங்க ஏழைங்க. 4 சதவீதம்.போறாது. ஒரு 10 சதவீரமா ஏத்திக்.குடுங்க.
// நடப்பு 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது...// யாராவது எவ்வளவு சதவீதம்னு சொல்லுங்கப்பா.
தேர்தல் வருதில்ல,,,அதுதான் மத்திய அரசு ஊழியர்கள் மீது மத்திய அரசுக்கு திடீர் கரிசனம்....
ஆண்டுக்கு இருமுறை வழக்கமான ஒண்ணுதான். இது கூட தெரியாம உளறல்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
நஷ்டத்தில் இயங்கும் / தேவையற்ற அரசு நிறுவனங்களின் ஊழியர் சம்பளம் / சலுகை மற்றும் நிர்வாக செலவை, வழக்கம்போல் தனியாருக்கு வரியாக விழும். மீண்டும் மீண்டும் தனியார் வயிற்றில் ஈர துணி.