Load Image
Advertisement

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 8,000 ஆனது

முழு விபரம்:

அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் (பிப்.,06) அன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் உயிர்ச்சேதம் பெருமளவில் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

Latest Tamil News


(பிப்.,06) அன்று துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.9ஆக பதிவாகியுள்ளது. காசியன் தெப்பின் 26 கிலோமீட்டர் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஐரோப்பா நாடான, தெற்கு துருக்கியில் அங்காரா, காசியான்டேப், கரோமான்மராஸ், ஹாதாய், உஸ்மானியா, அடியமான், மலாட்டியா, சன்லிபிரா, அதானா,உள்ளிட்ட 10 நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மூன்று முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
நிலநடுக்கதால் பெரிய கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. இதையடுத்து மக்கள் பாதுகாப்பு கருதி, சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Tamil News

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் அருகேயுள்ள இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகின.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால், சேதங்கள் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கு உலகின் 12க்கும் மேற்பட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கும் என தெரிவித்துள்ளார்.

கடும் குளிர்நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் மீட்பு படையினர் சவாலினை சந்தித்து வருகின்றனர். நிலநடுக்கம் பீதி காரணமாக வெளியில் தங்கியுள்ள மக்கள் பெரும் ்அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.வாசகர் கருத்து (59)

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  2007-2019 வரை பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்துக்களின் காலியிடங்கள், வீடுகள் பிடுங்கப்பட்டு அடித்து துரத்தப்பட்டு உள்ளனர். இந்து கோவில்கள் சேதப்படுத்தி உள்ளனர். 1947 ல் சுதந்திரம் அடைந்தபோது பங்களாதேஷில் 22% இந்துக்கள் எண்ணிக்கை 2011 ல் 8.5% குறைந்ததிலேயே புரிந்து கொள்ள வேண்டியது, பல இந்துக்கள் கொல்ல பட்டு இருக்கலாம் அல்லது நாட்டை விட்டு வெளியேறி இருக்கலாம். இந்த செய்தியை படிக்கும்போது மட்டும் திராவிடனுக்கு கண்ணில் தண்ணீர் வராது ..அப்பேற்பட்ட திராவிட மனிதாபிமானம் ...

 • Manikandan Sivalingam - delhi,இந்தியா

  மனித...சமூதாயத்தை.... வேருடன்....அழிக்கும்....... அறிவியல்..... தொழில் நுட்பம்...... விஞ்ஞான... வளர்ச்சி....

 • Subramanian -

  மிக்க துயரமான சம்பவம். தலைவர்கள் மூர்க்கனாக இருந்தாலும் மக்கள் பாவம் தானே. முடிந்த அளவு உதவிடுவோம்

 • ... - ,

  இப்ப எல்லாரும் பாடுங்க... மதம் என பிரிந்தது போதும் ன்னு....

 • zakir hassan - doha,கத்தார்

  ஒரு நாடும் மக்களும் பெரும் துயரிலிருக்கும் பொழுது மதம் பிடித்து அலையுற இந்த மாபாவிகள் எத்தனை கோவில் கோவிலா சென்றாலும் மன்னிப்பே கிடைக்காது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement