ADVERTISEMENT
ரேஷன் கார்டு விபரங்கள் வெளியீடு
புதுச்சேரி, : புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 135 நபர்களின் பெயர்கள் முறைகேடாக இடம் பெற்றுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும், இலவசங்களையும் புதுச்சேரி அரசு வழங்கி வருகிறது. இவற்றை பெற ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது.
எனவே, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாநிலத்தில் ரேஷன் கார்டு வைத்திருந்தாலும், புதுச்சேரி ரேஷன் கார்டி லும் பெயரை முறைகேடாக சேர்த்து விடுகின்றனர்.
புதுச்சேரி ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க வேண்டும் என்றால், தங்களது மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டில் பெயரை நீக்கி, சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இரண்டு இடங்களிலும் பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதனால், இரண்டு மாநிலங்களிலும் அரசு வழங்கும் சலுகைகளை பெறுகின்றனர்.
குறிப்பாக, புதுச்சேரி, காரைக்கால் பகுதி ரேஷன் கார்டுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களும், மாகியில் கேரளாவை சேர்ந்தவர்களும், ஏனாம் பகுதியில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பலரும் தங்களது பெயரை சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக, அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதையடுத்து, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அனைத்து கார்டுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாநில ரேஷன் கார்டில் பெயர் இருக்கும் நிலையில், அதை நீக்காமல், புதுச்சேரி யூனியன் பிரதேச ரேஷன் கார்டிலும் முறைகேடாக பெயரை சேர்த்துள்ளது கண்டறியப்பட்டது.
அதனடிப்படையில், இரண்டு மாநிலங்களின் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, புதுச்சேரி பிராந்தியத்தில், இரண்டு மாநில ரேஷன் கார்டுகளில் பெயர் இடம் பெற்றுள்ளவர்களின் விபரங்கள், குடிமைப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 11 ஆயிரத்து 135 பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தின் விழுப்புரம், கடலுார், நாகை, காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.
புதுச்சேரியில் ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள பெயர், புதுச்சேரி முகவரி, ரேஷன் கடை எண், ரேஷன் கார்டு எண், எந்த வகையை சேர்ந்த கார்டு போன்ற விபரங்களும், அதே பெயர் இடம் பெற்றுள்ள அவர்களது மாநிலத்தின் பெயர், முகவரி, ரேஷன் கார்டு எண் போன்ற விபரங்களும் தெளிவாக இடம் பெற்றுள்ளது.
அடுத்தக்கட்டமாக, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் இரண்டு மாநிலங்களில் இடம் பெற்றுள்ளவர்களின் விபரங்களை வெளியிட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை முடிவு செய்துள்ளது.
மற்ற மாநிலங்களில் இடம் பெற்றுள்ள பெயரை நீக்க வேண்டும், இல்லாவிட்டால் புதுச்சேரி ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்கி, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!