வந்தே மெட்ரோ ரயில் சேவை: மத்திய அரசின் அடுத்த திட்டம்

வரவேற்பு
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் பயணியரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், வந்தே பாரத் ரயில்களுக்கு நிகராக, வந்தே மெட்ரோ ரயில் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
வலியுறுத்தல்
இது குறித்து ஹைதராபாதில் அவர் கூறியதாவது:
வந்தே பாரத் ரயில்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதிவிரைவு வந்தே மெட்ரோ ரயில்களை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டார்.
உலகத் தரம் வாய்ந்த, பிராந்தியங்களுக்கு இடையிலான ரயில்களாக இவை உருவாக வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அடுத்த 12 முதல் 16 வாரங்களில், வந்தே மெட்ரோ ரயில்களுக்கான முன்மாதிரியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
அதற்கடுத்த ஒரு ஆண்டுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, புதிய ரயில்கள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும்.
இந்த ரயில்கள் 100 கி.மீ., இடையில் அமைந்துள்ள நகரங்களுக்கு இடையே இயக்கப்படுவதால், உள்ளூர் பயணியருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (11)
சரிதான்... வந்தே ரயில். அடுத்து வந்தே விமாபம். வந்தே சொகுசு கப்பல். வந்தே அரிசி. வந்தே ரேஷன். வந்தே கோதுமை. வந்தே கார், பஸ்சுனு உட்டு அசத்துங்க.
வந்தே பாரத் என்றால் பாரதத்திற்கு வணக்கம் என்று பொருள். அப்படியானால் மெட்ரோவுக்கு வணக்கம் என்று பொருளாகுமே. பாரதமும் மெட்ரோவும் ஒன்றா?
தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யலாமா என்று யோசித்து செய்யுங்கள். அவர்கள் பொய்களையும் பொய் சொல்பவர்களை மட்டுமே நம்புபவர்கள்
வந்தே பாரத் ரயில்களில் வசதி படைத்தோர் மட்டுமே பயணிக்க முடியும் .
இது போன்ற சொகுசு ரயில்களில் வரும் கூடுதல் லாபம் மூலமே உள்ளூர் பாசஞ்சர் ரயில்களை சலுகைக் கட்டணத்தில் ஓட்ட முடிகிறது. தாம்பரம் கடற்கரை மாத சீசன் டிக்கெட்டை வெறும் 185 ரூபாய்க்கு கொடுக்க முடிகிறது .
மித தூர எக்ஸ்பிரஸ் மற்றும் குறைந்த தூர பாசஞ்சர் சேவைகள் மட்டுமே தற்போதைய தேவை.. சொகுசு கும்பல், கம்பெனி பணத்தில் பிழைப்பை ஓட்டுவதற்கு எதற்கு இந்த ரயில்கள் ?