டவுட் தனபாலு: கல்லெடுத்து எறியுறாங்க; தொண்டர்கள் தலையில் அடிக்கிறாங்க; தீண்டாமை பார்க்குறாங்க என, அமைச்சர்களின், 'அட்ராசிட்டி' நீண்டுக்கிட்டே இருக்கு... அவங்களுக்கு எதிரா நீங்க அதிரடி, 'ஆக் ஷன்' எடுக்கலைனாலும், சிறு அறிவுரை கூட வழங்காம, கலெக்டர்களுக்கு அறிவுரை சொல்வது நியாயமா என்ற 'டவுட்' வருதே!
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: கடலில் பேனா சின்னம் அமைக்க, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைவர் சீமான் எதிர்ப்பு தெரிவிக்கிறார். சர்தார் வல்லபபாய் படேலுக்கு, 3,000 கோடி ரூபாய் செலவில் சிலை வைத்த போது, சீமானுக்கு வராத கோபம், இன்றைக்கு வருகிறது. படேல் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்; கருணாநிதி பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலா?
டவுட் தனபாலு: மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, தி.மு.க.,வின் அனாவசிய திட்டத்துக்கு இப்படி முட்டுக் கொடுக்கணுமா... தி.மு.க., கூட்டணி கட்சிகளில் யார் அதிகமா அக்கட்சிக்கு காவடி துாக்கறாங்கன்னு ஒரு போட்டி வச்சா, 'டவுட்' இல்லாம உங்களுக்கு தான் முதலிடம்!
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: விசைத்தறி, கைத்தறிக்கு வழங்கப்படும் இலவச மின்சார அளவை அதிகரித்து முதல்வர் அறிவித்துள்ளார். இது, தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு அல்ல. சில வாரங்களாக இதுபற்றி முதல்வரிடம் பேசி, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
டவுட் தனபாலு: நீங்க கற்பூரம் ஏத்தி சத்தியம் அடிச்சாலும், மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள், 'ஸ்டிரைக்' நடத்திய போதெல்லாம் மவுன சாமியா இருந்துட்டு, இப்ப, திடீர் ஞானோதயம் வந்த மாதிரி அவங்களுக்கு சலுகைகளை அள்ளி வீசுறதுக்கு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மட்டும் தான் காரணம் என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை!
வாசகர் கருத்து (7)
அதற்க்காகத்தான் நான் 172 இந்து கோவில்களை தரை மட்டம் பண்ணினேன். ஒரு மாதாகோவிலையும் மசூதியையும் இடிக்கவில்லை. நான் மத மாச்சரியம் பார்க்காதவன் அப்படித்தானே திருட்டு திராவிட மடியல் அரசே
தம்பி முத்தராசா - நினைவுசின்னம் வைப்பதை யாரும் எதிக்கவில்லை - அதற்க்கு என்ன தகுதி என்பது ஒரு புறம் இருக்கட்டும் - அதை கடலுக்குள் வைக்க வேண்டுமா - இப்படியே போனால் இன்னும் சில தலைமுறைகளுக்கு பிறகு மெரினா முழுதும் - சமாதியும் , சின்னமுமாய் , சின்னாபின்னமாக இருக்கும்
படேல் சிலையை செய்ய இந்தியாவில் ஸ்டார்ட்டுப் யாரும் இல்லை, மேக் இன் இந்திய என்று யாரும் இல்லை அம்பானி, அதானி என்று யாரும் மோடிக்கு கிடைக்கவில்லை ஆகவே மூவாயிரம் கோடியில் சீனாவில் செய்யப்பட்டு இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது
கலெக்டர்கள் நியாயப்படி பணிநியமனம் செய்தால், தங்கள் லிஸ்டை நீட்டி கொண்டு,நாலு கட்சி ஆட்கள் வருவார்கள் மீறி சுதந்திரமாக செயல்பட்டால் ஒன்று மாற்றலுக்குத் தயாராக வேண்டும், அல்லது மருத்துவமனைக்கோ, அல்லது அந்த அரசியல்வாதியின் படை பலத்தைப் பொறுத்து மார்ச்சுவரிக்கோ போகும் நிலைகூட வரலாம் நீங்கள் காப்பாற்றுவது உங்கள் கட்சி ஆளைத்தானாக இருக்கும் எதற்கு இந்த அறிவுரை?
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
கலெக்டர் கள் அரசு ஊழியரென்றாலும் எடுப்பார் கைபிள்ளைபோல், நினைத்தவுடன் பதவி மாற்றத்திற்கு உட்பட்டவர்கள். MP , மந்திரிகள் பலபேர் ஸ்டாலின் அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே களம் கண்டவர்கள். பக்குவமாக திரைமறைவில் தான் சொல்லமுடியும். இல்லையேல் திராவிட கப்பல் தரைதட்டி விடும்..