Load Image
Advertisement

பண்ணை நிலங்களை கண்காணிக்க உதவும் சூரிய சக்தி சிசிடிவி கேமராக்கள்!

Tamil News
ADVERTISEMENT
ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் பண்ணை நிலங்களில் கால்நடைகள், விளைப்பொருட்கள், மரங்கள், உபகரணங்கள் போன்றவை களவு போவது வாடிக்கை. இதனை தடுக்க சிசிடிவி பொருத்தலாம் என்றாலும், பல இடங்களுக்கு மின்சார ஒயர்களை இழுப்பது என்பது மிகுந்த செலவு வைக்கும். இந்தப் பிரச்னையை யோசித்து பல நிறுவனங்கள் சூரிய சக்தியை சேமித்து வைத்துக் கொண்டு இயங்கும் சிசிடிவி கேமராக்களை கொண்டு வந்துள்ளன. இதில் சிம் கார்டு பொருத்தி அதன் மூலம் பதிவுகளை சர்வரில் சேமித்துக்கொள்ளலாம்.

இந்த மேம்பட்ட சிசிடிவி கேமரா பண்ணைகள் மற்றும் கழனிகளுக்கு மட்டுமின்றி, அடிக்கடி மின்சார செயலிழப்பு ஏற்படும் பகுதிகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

அதே போல் தற்காலிகமாக ஒரு இடத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன எனில், அங்கும் இதனை நிறுவி கண்காணிக்கலாம். அதிகப்படியான இன்ஸ்டாலேஷன் உபகரணங்கள் தேவைப்படாது. ஒரு செல்போனை பொருத்தி வைத்துவிட்டு லைவ் பார்ப்பது போல் எளிதானது.

சூரிய ஒளி இல்லை எனில்?



Latest Tamil News சூரிய மின்சக்தியால் இயங்கும் இந்த நவீன சிசிடிவி கேமராக்களில் ஸ்மார்ட் பவர் மேனேஜ்மென்ட் மற்றும் நீண்ட நாட்களுக்கான ஆற்றலை சேமிக்கும் திறன் கொண்ட பேட்டரிகள் இன்பில்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த பேட்டரிகள் கடைசியாக பெற்ற சூரிய ஆற்றலைக் கொண்டு ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை கூட சூரிய ஒளி இல்லாமலேயே வேலை செய்யும்.

சூரிய சக்தி சிசிடிவி கேமராக்கள் ஜி.எஸ்.எம்., 4ஜி எல்.டி.இ., உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்கும். இதனால் எளிதாக காட்சிகள் இன்டர்நெட் மூலம் நமக்கு கிடைக்கும்.

வானிலை பாதிக்குமா?



Latest Tamil News இது போன்று வெட்டவெளியில் வைக்கப்படும் சிசிடிவிக்கள் அனைத்து வானிலையையும் சமாளித்தால் தான் பயனுள்ளதாக இருக்கும். அதனை உணர்ந்தே, மழை, புயல் போன்றவற்றையும் தாங்கி நிற்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். நீரை உள்ளே விடாத அம்சம் ஆகியவற்றுடன் இவை வடிவமைக்கப்படுகின்றன. உறைபனி போன்ற சமயங்களிலும் இதன் பேட்டரிகள் வேலை செய்யும் வகையில் தயாரிக்கின்றனர்.

இனி மரத்தை வெட்டிச் செல்வார்களோ, பயிறுகளை மாடுகளை விட்டு நாசம் செய்வார்களோ, திருடிச் செல்வார்களோ என்ற கவலையின்றி இருக்கலாம். அத்துமீறுபவர்களை ஆதராத்துடன் எதிர்கொள்ளலாம். காவல்துறையில் புகார் அளிக்கலாம். மீடியாக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டலாம்.



வாசகர் கருத்து (1)

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    நம்ம ஆட்கள் சூரிய சக்தி சிசிடிவி கேமராக்களேயே ஆட்டய போடுவாய்ங்களே☺️☺️☺️

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement