இந்த வேளாண் ஊக்குவிப்பு நிதியை உருவாக்குவதன் மூலம் அக்ரி ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் வேளாண் கடன் இலக்கை ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிப்பது, வேளாண் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது ஆகியவை இத்துறையில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான குளோபல் டேட்டா தெரிவித்துள்ளது.

நூறு கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட ஸ்டார்ட்அப்களை யூனிகார்ன் என்பார்கள். இந்தியாவில் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப்களில் மட்டுமே இன்னும் எந்த ஒரு நிறுவனமும் யூனிகார்ன் அந்தஸ்தை பெறாமல் உள்ளது. தற்போது அத்துறையில் அரசின் கவனம் திரும்பியுள்ளது. விவசாயத்தை நிலையானதாக மாற்றுவது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்குவதற்கும் புதுமையான ஸ்டார்ட்அப்கள் செயல்படும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வேளாண் ஊக்குவிப்பு நிதி குறித்து, அஜிலிட்டி வென்ச்சர்ஸின் இணை நிறுவனர் தியானு தாஸ் “விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்ய தேவையான தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் மத்திய அரசின் இந்த நிதி உதவும். தோட்டக்கலை, மாற்று புரதங்கள், மீன் வளர்ப்பு மற்றும் உணவுக் கழிவுகளைக் குறைத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஸ்டார்ட்அப்களை உருவாக்க முடியும்” என கூறியுள்ளார்.

வாசகர் கருத்து (7)
ஹிண்டபார்க்கின் நெத்தியடிக்கு மருந்து குளோபல் டேட்டா. கொஞ்சம் காயம் ஆறும்.
இந்த வேளாண் ஊக்குவிப்பு மீதியை தனியர் அத்தாணி வசம் ஒப்படைத்தால் அவருக்கு இந்த நெருக்கடி நேரத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.
இது எங்களுக்கே எங்க அரசுக்கே தெரியும் போடா++நீங்களும் உங்க ஆராய்ச்சிகளும், அறிவிப்புகளும்+++போயி ஒங்க வேலை என்னவோ அதைப் பாருங்கடா+++எதுக்கு அடிப்போடுறானுவ இவனுவ ? .++++
இந்தியா ஒரு விவசாய நாடு ,ஆனால் இந்தியாவில் விவசாயம் எப்பவோ செத்துப் போச்சு ,விவசாய நிலங்கள் எல்லாம் காலி மனைகளாக மாற்றப்பட்டு விட்டன ,பல இடங்களில் பிளாட் போட்டு நல்ல விலைக்கு வித்துட்டாங்க .பருவ நிலை மாற்றம் ,பொய்த்துப் போகும் மழை ,அதிக அளவில் பெய்யும் மழை ,விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் ஆட்களின் கூலி உயர்வதால் விலைகள் கட்டுப்படியாகாமல் குறைந்த விலைக்கு விவசாயம் செய்த பொருட்களை விற்கும் அவலம் தொடர்கிறது.ஒரு சில சமயங்களில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கின்ற போதிலும் பெரும்பாலும் நஷ்டத்தையே சந்திக்கின்றனர் .இந்தியாவில் விவசாய விளை நிலங்களை புதிதாக உருவாக்க முடியாது ,இருக்கின்ற விவசாய விளை நிலங்களை விலை நிலங்களாக மாற்ற அரசு வழி செய்து விடக் கூடாது...வெறும் "ஸ்டார்ட் அப்" களோடு விவசாயம் முடிந்துவிடக் கூடாது..
விவசாயத்தில் ட்ராக்டர் பயன்பாட்டை கம்யூனிஸ்டுகள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்திய போது திமுக அவர்களுடன் கூட்டணி வைத்தது வரலாறு. கிராமத்து ஏழைகள் முன்னேறவே😪 கூடாது என்பதில் எப்போதுமே மும்முரம்.