30 குண்டுகள் முழங்கிட வாணி ஜெயராம் உடல் தகனம்; பலர் கண்ணீர் அஞ்சலி
சென்னை: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பிரபல பின்னணி பாடகி சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் ஜெயராம், 2018 ல் மறைந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. வீட்டில் தனியாக இருந்த வாணி ஜெயராம் நேற்று(பிப்.,4) காலமானார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாலை வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை , அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு, அவரது வீட்டருகே, வாணி உடலுக்கு போலீசார் மரியாதை அளித்தனர்.
பிறகு பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து (8)
ஆழ்ந்த இரங்கல்கள் வாணி ஜெயராமின் மண்டையில் காயம் மரணம்???திமுக அரசு 30 குண்டுகள் முழங்கிட வாணி ஜெயராம் உடல் தகனம் செய்ததின் பின்னணி மர்மம் என்ன
ஆழ்ந்த இரங்கல், ரசிகர்கள் அனைவரும் இவர் பிள்ளைகளே
அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.
இசை மணம் வீசிக்கொண்டு இருந்த மல்லிகை மறைந்துவிட்டது,அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வட நாட்டு இசைக்குயில் மற்றும் அவர் ஆதரவில் தொழில் செய்து கொண்டிருந்த இசை அமைப்பாளர்கள் இந்த தென்னாட்டு குயிலுக்கு செய்த துரோகத்தைப்பற்றி ஒரு பத்திரிகையோ மற்ற செய்தி நிறுவனங்களோ குறிப்பிடவில்லை . வாணி ஜெயராமுக்கு வாய்ப்பளித்தாலோ அவரது பாட்டின் இசையமைப்பில் பங்கேற்றாலோ பிறகு உங்களுக்கு நான் ஒருபோதும் பாடவோ மற்ற படங்களுக்கு இசையமைக்க அல்லது இசைக்க வரும் வாய்ப்புக்களை வரவிடவோ செய்ய மாட்டேன் என்றாராம் அந்த ( தற்போது உயிருடன் இல்லை ) இசையரசி . சொந்த தங்கையின் வாய்ப்புக்களையே கெடுத்த அவர் வாணி ஜெயராமுக்கு இது செய்யாமல் என்ன செய்வார் ? நல்லவேளை தமிழ் த்திரை அவரை அரவணைத்து அவர் பெயரை உலகிற்கு வெளிக்கொண்டு வந்தது ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் , TMS போன் பாடகர்களும் MSV, இளையராஜா , குன்னக்குடி போன்ற இசை அமைப்பாளர்களும் இவருடன் வேலை செய்ய தயங்கவே இல்லை என்பது தான் நாம் செய்த அதிர்ஷ்டம்