ADVERTISEMENT
சென்னை: நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பருவம் தவறிப் பெய்த மழையால் காவிரி டெல்டாவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 22% வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்.

முதிர்ச்சியடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3%ல் இருந்து 5% வரை தளர்த்த வேண்டும்.சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5% லிருந்து 7% வரை தளர்த்த உரிய உத்தரவுகளை பிறபிக்க வேண்டும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (14)
நெல் கொள்முதலை எதுக்கு மத்திய அரசிடம் கொடுக்கணும்? அவிங்க என்னமோ தாங்கதான் படியளக்குற மாதிரி மெடல் குத்திக்கறாங்க.
... அதி முக்கியமான தளர்வாக .. எங்குமே கோடவுன் இல்லாமல், திறந்த வெளியிலேயே நெல்மூட்டைகளை அடுக்கி வைக்க .. தமிழக அரசுக்கு நம் மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்..என்ற கோரிக்கையை ஏன் வெளியிடவில்லை?
ஊரன் வீட்டு நெய்யெ என் பொண்டாட்டி கையெ
பேனா 82 கோடியை விவசாயிகளுக்கு செலவிட்டால் என்ன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
படுபாவி பயல்களா. 81 கோடிக்கு பேனா வைக்க தெரியுது. மழை நீர் படாமல் உணவு பொருளை சேமிக்க துப்பு இல்லை. இதே நிலை தான் காவிரியில் மற்ற ஆறுகளில் பிற மாநிலங்களில் அணை கட்டுவது. அவர்கள் மக்களுக்கு அணை கட்டுகிறார்கள். இவர்கள் கரிகாலன் கட்டிய கல்லணையில் மணல் எடுத்து விற்பனை செய்கின்றனர். இவங்க எல்லாம் காசு கிடைத்தால் தான் குடும்பம் உறுப்பினர்கள் ஐ கூட விற்று விடுவார்கள். ஏ தாழ்ந்த தமிழகமே.