பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், ராணுவ நடவடிக்கை வாயிலாக 1999ல் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். 2009 வரை பாக்., அதிபராக பதவி வகித்துவந்தார். இந்தியா - பாக்., இடையிலான கார்கில் போருக்கு முஷாரப் தான் காரணியாக இருந்தார். 2016 முதல் ஐக்கிய அரபு எமீரேட்சின் துபாயில் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக துபாயில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் முஷாரப் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று(பிப்.,05) அவர் காலமானார்.
இந்தியாவில் பிறந்தவர்
நாடு பிரிவினைக்கு முன்னர், இந்திய தலைநகர் டில்லியில் பிறந்தவர் முஷாரப். பிரிவினைக்கு பிறகு, குடும்பத்தினருடன் கராச்சிக்கு அவர் இடம்பெயர்ந்தார்.
துபாயில் தஞ்சம்
முஷாரப், பாக்., முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். அவர் மீது, 2007ல் பாக்., அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்த வழக்கும் உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக, 2016ல் துபாய் சென்றவர், அதன் பின் பாக்., திரும்பவில்லை.
இரங்கல்
முஷாரப் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
வாசகர் கருத்து (11)
இவனை இந்திரன் சந்திரன் என்று காங்கிரசும் அப்துல்லாவும் புகழ்கிறார்கள். தேசத் துரோகிகள்
என்ன ஆட்டம் ஆடினாலும் இது தான் எல்லோர்க்கும் முடிவு ஆனால் வாழும் காலத்தில் சண்டை பதவி வெறி ஆணவம் இதை தான் மனித மனம் விரும்புகிறது முடிந்தவரை அமைதி ஒற்றுமையுடன் வாழ மனித மனம் ஏனோ எண்ணுவது இல்லை
குறிப்பாக அவனுவ எண்ணுவதே கிடையாது+++++அவனுவ சித்தாந்தமே வேற, ரொம்ப வித்தியாசம் -பூமியிலேயே தனி.
அப்போ 72 கன்னிகைகள் அவனை அல்லாஹ்வின் உலகத்தில் வரவேற்கும் என்று நிச்சயமாக சொல்லலாம். என்ன ஜிஹாதிகள் சரிதானே
இங்கே கான்கிராஸ் காரன் துக்கம் அனுஷ்டிப்பான்+++இதுவே யுபிஏ ஆட்சியா இருந்தால் காஷ்மீரில் அவனுவ தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டிருப்பானுவ+++அவ்வளவு நெருக்கம்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
நம்ம கள்ள நோட்டு களவாணி இரங்கல் தெரிவித்துள்ளாரா.