Load Image
Advertisement

சோனி கேமராவுடன் களமிறங்கும் விவோ - பட்டயை கிளப்பும் சிறப்பம்சங்கள்...!

Tamil News
ADVERTISEMENT
விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான விவோ எக்ஸ்90 ப்ரோ மாடல் போனை இந்தியாவில் இந்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாடல் ஏற்கனவே சீனாவில் கடந்த நவம்பர் மாதம் அறிமுகமாகி அதிக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் இந்த போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

புதிய விவோ எக்ஸ் 90 புரோ மாடலில் 6.78 இன்ச் 10-பிட் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.120 ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபில் ரிப்ரெஷ் ரேட்டுடன், அதிகபட்சம் 1300 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. அதுபோக, இது ஒரு வளைந்த AMOLED டிஸ்ப்ளே ஆகும்.

கேமரா அம்சம் குறித்துப் பார்க்கையில், பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைப் பெறுகிறது. இதில், 50MP Sony IMX989 பிரைமரி கேமரா, 12MP IMX663அல்ட்ரா வைடு கேமரா, மற்றும் 1இன்ச் சோனி கேமரா மற்றும் 32எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை கொண்டுள்ளது. கேமராக்கள் Zeiss பிராண்டட் ஆதரவையும் V2 இமேஜிங் சிப் ஆதரவையும் கொண்டிருக்கிறது.


பேட்டரியை பொறுத்தவரையில், 4870எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 120வாட்ஸ் வயர் மற்றும் 50வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் உள்ளது. USB Type-C போர்ட் உள்ளது. இதைத் தவிர ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ, aptX-HD, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான IP68 சான்றிதழ், NFC, IR, 5G, Wi-Fi 6, ப்ளூடூத் v5.3 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில், 12ஜிபி + 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரையில் இந்தியாவில், ரூ.96,000-க்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement