விமான பயணியர் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும்: சிந்தியா

கட்டாயம்
அவர் பேசியதாவது:
சென்னை விமான நிலையத்தில், பயணியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் இருந்தாலும், தற்போதைய விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டியது கட்டாயம்.
அதற்கு தேவையான நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
அதை மாநில அரசு விரைந்து செய்தால், சென்னை விமான நிலைய விரிவாக்க பணியை வேகமாக செயல்படுத்த முடியும்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் விமான சேவைகளின் வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தில், மூன்று விமான நிலையங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஒன்பது விமான நிலையங்கள் உள்ளன.
நாடு முழுதும் உள்ள விமான நிறுவனங்களிடம், 2014ல் 400 விமானங்கள் மட்டுமே இருந்தன. தற்போது, 700 விமானங்களாக அதிகரித்துள்ளன. அடுத்த ஏழு ஆண்டுகளில், இந்த விமானங்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிக்கக் கூடும்.
கடந்த 2014ல் சென்னை விமான நிலையத்தில் இருந்து, 34 நாடுகளின் பெரு நகரங்களை இணைக்கும் விதத்தில், விமான சேவைகள் நடந்தன. தற்போது, 61 நாடுகளின் நகரங்களை இணைக்கும் வகையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
உள்நாட்டு விமான சேவைகளின் வளர்ச்சி, 19 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுதும் 20 கோடி பேர் விமான சேவையை பயன்படுத்துகின்றனர். வரும் காலத்தில், இது 40 கோடியாக அதிகரிக்கும்.
பங்கேற்பு
எனவே பிரதமர், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில், அதிக அக்கறை, கவனம் செலுத்தி வருகிறார். தமிழக அரசு ஒருங்கிணைந்து, தேவையான நிலங்களை தாமதப்படுத்தாமல் விரைந்து கையகப்படுத்தி கொடுத்தால், விமான நிலையங்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி சோமு, சென்னை விமான நிலைய ஆணைய தலைவர் சஞ்சீவ்குமார், இயக்குனர் சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து (4)
முதல் முதலில் கமலாபதி திருப்பதி ரயில் மந்திரியாக்க இருந்த போது தமிநாடு எக்ஸ்பிரஸ் மிக முக்கிய வண்டியாக இருந்தது.அப்போது ஏசி ஸ்லீப்பர் கிடையாது. ஏசி சிட்டிங் (உட்காரும் வசதி) மட்டும் தான். ஆனால் உட்காரும் இருக்கைகள் வசதியாகா இருந்தது. திரையில் மெல்லிசையை அதுவும் புகழ்பெற்ற பாடகிகள் நாட்டு புர ( அஸ்ஸாம் ) பாயாடல்கள் மற்றும் ஹிந்தி பாடகிகள் பாடல் கல் ஒலிக்கும் மடுவில் முக்கிய அறிவிப்புகள் ஒலிக்கும். நம் பெட்டிகள் உள்ளூர உள்ள போட்டர்கள் செனட் நம்பர் இட்டு கார்டவானுடன் இணைந்த பார்ஸல் வண்டியில் வைத்து விடுவார் . நாம் இறங்கும் ஸ்டேஷனலில் நம்மிடம் கொடுப்பார்கள் . மொத்தம் 13 பெட்டிகள் தான்.எஞ்சின் முதல் கடைசி பேட்டி வரை அதில் பயணிக்கும் ரயில் சிப்பந்திகள் வரைய எல்லாம் சதேர்ன் ரயில் வேயய் சேர்ந்தவர்கள். நான்றாக ஓடிக்கொண்டிருந்தது. மொத்தம் சென்னையிலிருந்து டில்லி வருய்ய 5 இடங்களித்தான் நிற்கும் அந்த வண்டியைய்ய யகியாரும் நடுவில் கைய்யாளவோ நிறுத்தவோ முடியாது. 28 மணி நேர்த்தில்சென்றடைந்த ரயில் நன்கு .ஓடிக்கொண்டிருந்ததை பார்த்த விஜவாடா டிவிசன் ரயில் ஊழியர்கள் எங்களுக்கும் அதில் வேலை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று முரண்டு பிடித்து அதில் பிடித்த சனியால் பல இடங்களில் நிறுத்த அதன் மதிப்பிழந்து சாத வண்டியாகி இன்று அதன் மதிப்பிழந்தது ஜி.ட்டி. எக்ஸ்பிரஸ் அளவு ஆகி விட்டது .
விமான கம்பெனிகள் அடிக்கும் லுட்டி அநியாயம் பஸ் பயணத்திவிட மோசம். மிக நெருக்கமான இருகைகள். அது உள்நாட்டு பயணிக்களுக்கு பொளது போசாக்கு க்காக முன்பெல்லாம் சிறிய திரையில் சினிமாவோ பாடல்களோ பார்க்க முடியும் . ஆதாய நிறுத்தி விட்டார்கள் . ஒரு டைம்லர் /சிறிய பாட்டுக்கு தண்ணீருக்கு காசு கொடுக்க வேண்டும். அதே ரயிலில் இரண்டடுக்கு ஏசி வ்வகுப்பில் செல்லலாம். ரைலில் நிலயித்தில் அவ்வளவு கெடுபிடிகள் இல்லை. ரயில் பயணத்தில் ரம்யமான இயற்கை கட்சிகலை ரசித்து செல்லலாம். அதுவும் குடும்பத்துடன் அபயணிக்க நல்லது.
இந்தியாவில் மத்திய அரசாங்கம் போதுமான ரயில்களை இயக்க வழி தெரியாமல் இருப்பதால் இனி எல்லாரும் விமானத்துல தான் பறந்து போகணும் போல இருக்கு ...
டி ஆர் பாலு ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் கையை பிடித்துக்கொண்டிருக்கிறாரே, வெட்டறதுக்காக அவர் கையை பிடிச்சுக்கிட்டிருக்காரோ ? ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஒண்ணும் வீரமணி மேல கையை வைக்கலியே ??