Load Image
Advertisement

மதுரை அரசு மருத்துவமனையில் அடிக்கடி நடக்குது; அடுத்தடுத்து பழுதால் நோயாளிகள் பரிதவிப்பு;

Tamil News
ADVERTISEMENT
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை தீவிர விபத்து பிரிவில் உள்ள 3 'லிப்ட்'களும் ஒரே நேரத்தில் பழுதடைந்ததால் எலும்பு மூட்டு பிரிவுக்கு வரும் நோயாளிகள் மாடி ஏற முடியாமல் பரிதவிக்கின்றனர்.

இந்த வளாகத்தில் தான் எலும்பு மூட்டு பிரிவு செயல்படுகிறது. உள்நோயாளிகள் முதல், 2வது மாடியில் உள்ளனர். 2வது மாடியில் பிசியோதெரபி இயங்குகிறது. வாகன பார்க்கிங் தளத்தில் உள்ள 2 'லிப்ட்'களின் அடியில், சில மாதங்களுக்கு முன் பெய்த மழைநீர் தேங்கி 'ஷாக்' அடித்ததால் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவு முன்புறம்உள்ள 3வது 'லிப்ட்' பழுதடைந்தது. 'லிப்ட்' உள்பகுதியில் உள்ள பட்டன் 'பேனல்' எண்கள் உடைந்துள்ளதால் சிலநேரங்களில் அதிலுள்ள சென்சார் வேலை செய்யாமல் 2வது, 3வது மாடிக்கு மட்டும் சென்று 'விளையாட்டு' காட்டுகிறது. வயதானவர்கள் ஏறமுடியாமல் சிரமப்படுகின்றனர்.

'ஸ்ட்ரெச்சர்' நோயாளிகள் மட்டும் சரிவுதளம் வழியாக அழைத்துச்செல்லப்படுகின்றனர். 'வீல்சேர்' நோயாளிகளை இரண்டு பேராக சரிவுதளத்தில் தள்ளிச் செல்வதற்குள் நாக்கு தள்ளுகிறது.

இந்த வளாகத்திற்கு எதிரிலுள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டடத்தில் அவசரநோயாளிகள், புறநோயாளிகள், டாக்டர்கள்செல்வதற்கென 7 'லிப்ட்கள்' உள்ளன. இதில் நோயாளிகள் செல்லும் ஒரு 'லிப்ட்' பழுதடைந்துள்ளது. நீண்ட காரிடாரில் நடந்து சென்று மற்றொரு 'லிப்ட்'டில் ஏறிச் செல்ல வேண்டும்.

ஆண்டு பராமரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் அடுத்தடுத்து 'லிப்ட்'கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகள் நலனில் அக்கறை செலுத்தி உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement