வாணி ஜெயராம் மறைவு: பிரதமர் இரங்கல்; கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி
புதுடில்லி: பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்: வாணி ஜெயராமின் மறைவு திரை உலகிற்கு பெரும் இழப்பு . மெல்லிசை குரல், பல்வேறு மொழிகளில் பாடிய அவரது பாடல்கள் என்றென்றும் நினைவு கூறப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் தெரிவித்து உள்ளார்.
![Latest Tamil News]()

கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இனிமையான குரல்..... அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பார பிரார்த்திப்போம்.