Load Image
Advertisement

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

Tamil News
ADVERTISEMENT
சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் 78 சென்னையில் காலமானார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் வீட்டில் வழுக்கி வழுந்ததில் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். "வீட்டுக்கு வந்த மருமகள்" என்ற படத்தில் பாடகர் டி எம் சௌந்தர்ராஜனோடு இவர் சேர்ந்து பாடிய ஜோடிப்பாடலான 'ஓரிடம் உன்னிடம் நான் கேட்பது' என்ற பாடலே இவர் பாடி தமிழில் வெளிவந்த முதல் திரைப்பட பாடல். 'மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை இவர் பாடி உள்ளார்.

Latest Tamil News

Tamil News
Tamil News
தமிழில் எம்எஸ் விஸ்வநாதன் துவங்கி ஏஆர் ரஹ்மான் வரை பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒரியா, குஜராத்தி மற்றும் பெங்காளி என அனைத்து மொழிகளிலும் 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஏராளமான பக்திப் பாடல்களும் தனி ஆல்பங்களாக இவரது குரலில் வெளிவந்திருக்கின்றன.

கடந்தவாரம் தான் மத்திய அரசு இவரின் கலைச்சேவையை பாராட்டி பத்மபூஷண் விருது வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அந்த விருதை பெறும் முன்பே அவர் மறைந்தது திரையுலக ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சந்தேக மரணம்



வாணி ஜெயராம் மரணத்தை ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேசனில் ஐபிசி174வது பிரிவின் கீழ் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இவரது மறைவுக்கு இசைகலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



வாசகர் கருத்து (18)

  • Gopi -

    இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் துல்லியமாக இருக்கும், குரலால் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்....

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    'மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற தேன் குரல் பாடல் மூலம் உலக மக்களை மயக்கியவர் மரண தேவதையை தன்... இன்குரலால் மயக்க இவ்வுலகை விட்டு சென்றுவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

  • Rajah - Colombo,இலங்கை

    ஆழ்ந்த அனுதாபங்கள் ...RIP

  • g.s,rajan - chennai ,இந்தியா

    மணம் வீசிக் கொண்டு இருந்த மல்லிகை உதிர்ந்து விட்டது ,ஆழ்ந்த இரங்கல்கள்,வாணி ஜெயராமின் ஆத்மா சாந்தி அடையட்டும் ,இனிமையான குரல் வளம் படைத்தவர் ,பல் வேறு பாடல்களை மிகவும் திறமையான முறையில் பாடியவர் .

  • vbs manian - hyderabad,இந்தியா

    நமக்கென்று பூமியில் கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று இது இன்றும் காதில் ஒலிக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்