Load Image
Advertisement

வாட்ஸ்ஆப் நிறுவனம் மீண்டும் நடவடிக்கை- 37 லட்சம் கணக்குகள் முடக்கம்..!

Tamil News
ADVERTISEMENT
இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக டிசம்பர் மாதத்தில் மட்டும் 37லட்சம் பயனர் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான செயலியாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இதற்கான பயனர்கள் அதிகம். வெறும் தகவல்களைப் பரிமாறும் தளமாக மட்டுமல்லாமல், தற்போது பணப் பரிவர்த்தனை செய்யவும், தொழில் சம்பந்தமாக வீடியோ கால் பேசும் வசதியும், ஆவணங்களை அனுப்பவும் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது வாட்ஸ்அப்.

இப்படி பலரால் பயன்படுத்தப்படும் செயலியை சிலர், பல தவறான செயல்களுக்காகவும் பயன்படுத்துவார்கள். அப்படிச் செய்யும் கணக்குகளை முடக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த முயல்கிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
Latest Tamil News அப்படி மாதந்தோறும் எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களைச் சரியாக இரண்டாவது மாத துவக்கத்தில் வழக்கமாக அறிவித்து வருகிறது. அதே போல கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்ற தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாகக் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36,77,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் 13,89,000 வாடஸ் அப் கணக்குகளை எந்தவித முன்னறிவிப்பு இன்றி முடக்கி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். இதுவே கடந்த நவம்பர் மாதம் 37 லட்சத்து 16 ஆயிரம் கணக்குகளையும், செப்டம்பர் மாதத்தில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது. கடந்த நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில், டிசம்பர் மாதத்தில் சற்று குறைவாகவே கணக்குகளை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement