Load Image
Advertisement

குழந்தை திருமணங்கள் அசாமில் 1,800 பேர் கைது

1,800 arrested in Assam for child marriages    குழந்தை திருமணங்கள் அசாமில் 1,800 பேர் கைது
ADVERTISEMENT


குவஹாத்தி, குழந்தை திருமணங்களை தடுக்க, அசாம் போலீசார் நடத்திய வேட்டையில், 1,800 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.

18 வயது



வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு குழந்தை திருமணங்கள் அதிகமாக நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, 14 - 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை திருமணம் செய்வோர் மற்றும் அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்வோரை, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க, சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Latest Tamil News
அதேநேரத்தில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை திருமணம் செய்வோர், அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்தவர்கள் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டது.

நடவடிக்கை



இதையடுத்து, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த போலீசார் களத்தில் குதித்தனர்.

இது தொடர்பான விசாரணையில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக, 4,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய 1,800 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில், சிறுமியரை, 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் திருமணம் செய்திருந்தால், அந்த சிறுவர்களை கைது செய்ய முடியாது. எனவே, அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நான்கு நாட்களுக்கு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (4)

  • venugopal s -

    பாஜக ஆட்சி சட்டத்தை மதித்து நடக்கும் ஆட்சி என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்!

  • mohanamurugan - panruti,இந்தியா

    குழந்தைகள் நலன் காக்க குழந்தை திருமணங்களை தடுக்க இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும் பாரதிய ஜனதா அரசாங்கம் போல சமூக சீர்திருத்தம் பேசும் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கமும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவிற்கு பிறகு குழந்தை திருமணம் அதிகமானது போல தெரிகிறது.

  • mohanamurugan - panruti,இந்தியா

    குழந்தை திருமணத்தால் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுவது உறுதி என்றால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தை திருமணங்களை தடுப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

  • SUBBU,MADURAI -

    Children have no mental capacity to make any decisions.Parents should support them till they have capacity to understand what is marriage. Children should have capacity to understand the character of man and know quality of her future with that man.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement