ADVERTISEMENT
சாம்சங் நிறுவனம் மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட் உருவாக்கத்தில் களமிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்பிள் நிறுவனம், XR/VR மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட்டை உருவாக்கி வருவதாகவும், இன்னும் ஒன்று இரண்டு மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதேபோல், சமீபத்தில் நடந்த கேலக்ஸி அன்பேக் 2023 (Galaxy Unpack 2023) நிகழ்ச்சியில் புதிய மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து, கூகுள் (Google) மற்றும் குவால்காமுடன் (Qualcomm) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆகுமென்டெட் விசுவல் ரியாலிட்டி மற்றும் மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட் (AR/MR) உருவாக்கத்தில் இறங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது முதல் VR ஹெட்செட்டை 2015ல் அறிமுகப்படுத்தியது. அதன்பின் பல்வேறு காரணங்களால், VR இன் சில பதிப்புகளை அறிமுகப்படுத்திய பிறகு, நிறுவனம் VR ஹெட்செட் சீரிஸை கைவிட்டது. பின்னர், நிறுவனம் PC களுக்காக ஒரு தனியான மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட்டை (Mixed Reality Headset)அறிமுகப்படுத்தியது, அதுவும் நிறுத்தப்பட்டது.
இந்த மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட் எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (Extended Reality, XR) செயல்பாட்டுடன் வரும் என சாம்சங் தெரிவித்துள்ளது. எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி என்பது எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி மூலம் நம்மை சுற்றியுள்ள இடங்களை மட்டுமின்றி, புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள், இயற்கைக் காட்சிகள், நேரே சென்று எளிதில் பார்க்க முடியாத இயற்கை அழகு கூடிய இடங்கள் ஆகியவற்றையும் நிஜத்தில் இருப்பதுபோல அனுபவிக்க முடியும்.
அதேபோல், புதிதாக காட்சிகளை க்ராஃபிக்ஸ் (Graphics) கொண்டு உருவாக்காமல், நம்மை சுற்றி இருக்கும் சுற்றுப்புறத்தையே இந்த ஹெட்செட் மூலம் அனுபவிக்க முடியும். இதற்கு கூகுள் மேப்பில் (Google map) உள்ள லைவ் வியூ நேவிகேஷன் (Live view navigation) சிறந்த உதாரணமாகும். அதுபோக, இந்த ஹெட்செட்டில் இருக்கும் முன் பக்க கேமராவில் காட்சிகளை படம் பிடிக்கப்பட்டு, அது உட்புறம் இருக்கும் திரையில் காட்டப்படும். நீங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஆரோக்களும் (arrows) கூட திரையில் தோன்றும்.
இந்த ஹெட்செட் உருவாக்கத்திற்காக சாம்சங் நிறுவனம் மெட்டா (Meta) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்களுடனும் கைகோர்த்து உள்ளதால், இந்த புதிய XR ஹெட்செட் ஆனது பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குவல்காம் சிப் செட்டை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வியரபில் டிவைஸானது (Wearable device), கூடிய சீக்கிரமே அறிமுகமாகும் என்று சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது..

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!