ADVERTISEMENT
----
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: கடலில் பேனா நினைவு சின்னம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம், தி.மு.க., பொதுக்கூட்டம் போல நடத்தப்பட்டது; யாரையும் பேச அனுமதிக்கவில்லை. எந்த வகையிலும் அரசு பணத்தை விரயமாக்கக் கூடாது. அறிவாலயம் உள்ள இடம், பொதுமக்கள் பயன்பாட்டுக்குரியது. அந்த இடத்தில் எவ்வளவு உயரத்துக்கு வேண்டுமானாலும், பேனா சிலை அமைத்துக் கொள்ளலாம்.
* டவுட் தனபாலு: உங்க கருத்து நுாற்றுக்கு நுாறு உண்மை... ஆனா, மெரினா கடற்கரையில, உங்க தலைவி ஜெயலலிதாவுக்கு, 80 கோடி ரூபாய் அரசு பணத்தை விரயமாக்கி, 'பீனிக்ஸ்' பறவை வடிவத்தில் நினைவிடம் கட்டிய நீங்க, தி.மு.க., அரசை விமர்சிக்கலாமா என்ற, 'டவுட்' வருதே!
***
அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தமிழக அரசு, கடலில் பேனா நினைவு சின்னம் நிறுவும் இடம் குறித்து, சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடம் கருத்து கேட்டிருக்கிறேன்; அங்கு வாழும் மீன்களின் வளம் குறித்தும் கேட்டிருக்கிறேன். மீனவர்கள், மீனவ சங்கங்களின் கருத்துகளையும், நேரடியாக கேட்டு அறிய உள்ளேன். அதன்பிறகு உறுதியாக கருத்து தெரிவிப்பேன்.
* டவுட் தனபாலு: கடலுக்குள் கட்டுமானங்கள் செய்வது, மீன்வளத்தை பாதிக்கும் என்பது பச்சை குழந்தைக்கு கூட தெரிஞ்ச உண்மை... ஒண்ணுக்கு மூணு முறை முதல்வராக இருந்த இவருக்கு, இதுகூட தெரியலையா அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறாரா என்ற, 'டவுட்'தான் வருது!
--------
பத்திரிகை செய்தி: தமிழகத்தில், காவிரி, பவானி, அமராவதி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்ட நதி, அடையாறு, கூவம் ஆகிய ,10 நதிகள் அதிகபட்சமாக மாசடைந்து உள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நதிகளில் மாசு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க, மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
* டவுட் தனபாலு: சாய, சலவை, தோல் தொழிற்சாலை முதலாளிகள், தங்களது கழிவுநீர் வடிகால்களா மேற்கண்ட நதிகளை விஷமாக்கி வச்சிருக்காங்க... இனியும், மாநில அரசு சுதாரிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் இந்த நதிகள், 'மேப்'ல மட்டும் தான் இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
வாசகர் கருத்து (2)
குதிரை ரெக்கை, பீனிக்ஸ் பறவை, இன்று பேனா…. எப்படியும் மக்கள் வரிப்பணத்தை ஆழும் பாழுமாக்கத் தீர்மானித்தாயிற்று. இதில் எல்லாக்கட்சியும் ஒன்றுதான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அந்த மீன்களே ஸ்டாலின் வயிற்றுக்குள் போய் கோரிக்கை வைத்ததாம். முத்தமிழ் வித்தவரின் பேனா சிலைக்கு எங்கள் உயிரைத் தியாகம் செய்வோம் என்று.