Load Image
Advertisement

அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தததை அடுத்து போலீசார் நகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Latest Tamil News


பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ராமர் பிறந்த அயோத்தியில் பிரமாண்ட கோயில் கட்டும் பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. 'அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகளில், 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்தாண்டு மகர சங்கராந்தியின் போது, கோவில் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்கு தயாராகி விடும்,

இந்நிலையில் மிரட்டல் வந்துள்ளது குறித்து ராமஜென்மபூமி பகுதி போலீஸ் ஸடேஷன் அதிகாரி சஞ்சீவ்குமார்சிங் கூறியதாவது: அயோத்தியில் வசிக்கும் ஒருவரது வீட்டிற்கு தொலைபேசி வந்துள்ளது. ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என கூறியுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். மேலும் இந்த போனை தொடர்ந்து அயோத்தி சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்துக்கு உத்தரவிட்டுள்ளோம். என்றார்.

Latest Tamil News
அயோத்தியில் ராமர், சீதை சிலை வடிவமைக்க நேபாளத்தில் இருந்து பல ஆயிரம் கிலோ எடை கொண்ட 2 புனித கற்கள் நேற்று வந்து சேர்ந்தது. இதனை பக்தர்கள் பலரும் வணங்கி சென்றனர். இந்நிலையில் வந்துள்ள மிரட்டல் அயோத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (10)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    யார் வேலையாக இருக்கும் என்று தெரியாதா என்ன? ஒரு கைப்பாவை பணத்திற்க்காக தானே வந்து ஒத்துக்கொள்வார்

  • amuthan - kanyakumari,இந்தியா

    Z+ பாதுகாப்பு கொடுக்க வேண்டும்

  • ருத்ரா -

    எங்கள் இந்தியா எங்கள் கோயில் கட்டுக்கதை தப்பான இழிவு படுத்திய மாலை போட்ட கும்பல் ரகசிய விசாரணை தொடங்கவும்

  • enkeyem - sathy,இந்தியா

    மிரட்டல் விடுத்த நாயை அவனுடைய தொலைபேசி எண் மூலம் ட்ரேஸ் செய்து அவனை தூக்கிவந்து நோண்டி நொங்கெடுத்தால் மற்ற நாய்கள் அடங்கி விடும்

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    மோடியின் அடுத்த தொகுதி அயோத்தியா ?

    • maharaja - திருநெல்வேலி,இந்தியா

      இன்னைக்கு தான்யா ஒரு ஒழுங்கான கமெண்ட் போட்டிருக்கே. ஆனால் நீ யாருன்னு எல்லோருக்கும் தெரியும். எப்படி இப்படி கமெண்ட் போட்டேன்னு தெரியல

    • s. mohan - ,

      பாகிஸ்தான்.

    • Barakat Ali - Medan,இந்தோனேசியா

      நான் எப்பவும் நியாயமா .... நீ யாருன்னு எல்லோருக்கும் தெரியும் ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up