ஈரோடு கிழக்கு தொகுதியில் ‛‛கையை எதிர்ப்பது தாமரையா? இன்றைய சந்திப்பின் ரகசியம் என்ன?

தொடர்ந்து அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்று அவரையும் சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரையில் அதிமுக பிளவுப்பட்டு இருப்பதால் வேட்பாளர் யாரை நிறுத்துவது என்பதில் குழப்பம் முடிந்தது. வேட்பாளரும் பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகன், பழனிசாமி சார்பில் தென்னரசு அறிவிக்கப்பட்டனர்.
இதில் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வேட்புமனு தாக்கல் தள்ளிப்போடப்பட்டது.
இரட்டைஇலை சின்னம் பெறுவதில் சர்ச்சை
இந்நிலையில் அண்ணாமலை பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும், சந்தித்து பேசியுள்ளது பல யூகங்களை எழுப்பி உள்ளது. இந்த சந்திப்பில் அதிமுக வழக்கில் சிக்கியிருப்பதால் இரட்டைஇலை சின்னம் பெறுவதில் பிரச்சனை இருக்கிறது. இதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்ற ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி சார்பில் காங்., போட்டியிடுகிறது. இதனை எதிர்த்து பா.ஜ., சார்பில் ஒரு வேட்பாளரை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்து பணியாற்ற வேண்டும் , திமுகவை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்பதே சிறந்தது, என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் பா.ஜ., தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தலாமா என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இவ்வாறு போட்டியிட்டால் பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்து விட்டார். பழனிசாமி பா.ஜ., வேட்பாளரை ஏற்று கொள்வாரா என்பது தெளிவாக இல்லை. இருந்தாலும் பா.ஜ., சார்பில் சுப்பிரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (55)
எப்படியிருந்த நான் எப்படி மாறிட்டேன்னு காட்டுறார். யாருன்னு சொல்லமாட்டேன்.
பழனிச்சாமி இந்த தேர்தலை பாஜகவின் பிடியில் இருந்து மீள்வதற்கும், காப்பாற்றுவதற்குமான ஒரு முக்கிய வாய்ப்பாக கருதி இத்தனை பிரயத்தனப்படுவது ஆனா சங்கிகளுக்கு பட்டவர்த்தனமாக புரிகிறது. தமிழ்நாட்டில் பாஜக கதி, அதோ கதி தான்னு
எப்படியிருந்தாலும் கை சின்னம் ஜெயிப்பது 100% உறுதியான ஒன்று. இருந்தாலும் பழனிச்சாமி இந்த தேர்தலை பாஜகவின் பிடியில் இருந்து மீள்வதற்கும், காப்பாற்றுவதற்கும் ஆன ஒரு முக்கிய வாய்ப்பாக இத்தனை இல்லையோ.
பா.ஜ., சார்பில் ஒரு வேட்பாளரை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ... இதைத்தான் தேர்தல் அறிவித்தவுடன் நான் கூறியிருக்கிறேன்...
இந்த இடைத்தேர்தலை வைத்து பா.ஜ., வரும் நாடாளுமன்ற தேர்வுக்கு பார்க்கிறது. ஆரம்பத்தில் இந்த தேர்தலில் நிற்கவேண்டிய அவசியம் பா.ஜ., வுக்கு கிடையாது என்றவர் தற்போது டெல்லி வரை சென்று வந்து இவ்வளவு முனைப்பு காட்டுகிறார்.