Load Image
Advertisement

12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Tamil News
ADVERTISEMENT
வெள்ளி முதல் வியாழன் வரை (3.2.2023 - 9.2.2023 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்



சூரியன், சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவர். சிவனை எண்ணி வழிபட நன்மை அதிகரிக்கும்.

அசுவினி: வெள்ளியன்று உற்சாகமாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். அதன்பின் அரசு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. திங்கள் மாலை முதல் செலவு அதிகரித்தாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும்.

பரணி:
வாரத்தின் தொடக்கத்தில் மனம் விரும்பிய வகையில் செயல்படுவீர்கள். மனதிற்கினிய சம்பவம் நடந்தேறும். செவ்வாய். புதனில் வெளித்தொடர்புகள் ஆதாயம் தரும். வியாழனன்று வேலைகளில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

கார்த்திகை 1ம் பாதம்: நண்பர்கள் வழியே புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். நிலைமையை சமாளிக்கும் அளவிற்கு வரவுகள் இருக்கும். மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். தவறான நண்பர்களை விட்டு விலகுவது நல்லது. பேச்சில் கவனம் தேவை.

ரிஷபம்



கேது, சனி, குரு நன்மையை வழங்குவர். சண்முகரை வழிபட வாழ்க்கை வளமுண்டாகும்
Latest Tamil News

கார்த்திகை 2, 3, 4: வெள்ளியன்று வாழ்வு சுமாராக செல்லும், அதன்பின் எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். செவ்வாய், புதனில் துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாழனன்று உங்கள் செயல்கள் வெற்றியாகும்.

ரோகிணி: செயல்களில் நெருக்கடி ஏற்பட்டாலும் புத்திசாலித்தனத்தால் எல்லாவற்றையும் சரி செய்வீர்கள். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். பகைவர் தொல்லைகள் விலகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

மிருகசீரிடம் 1, 2: வெள்ளியன்று நெருக்கடிகளை சந்திப்பீர்கள். அதன்பின் உங்கள் முயற்சிகளில் கூடுதல் பலன் கிடைக்கும். பண வரவில் இருந்த தடை விலகும். உங்கள் செயல்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

மிதுனம்



புதன், சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்குவர். மீனாட்சியம்மன் வழிபாடு முன்னேற்றத்தை உண்டாக்கும்.

மிருகசீரிடம் 3, 4: சங்கடங்கள் விலகி நன்மை காணும் வாரம் இது. நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டாகும். முதலீடுகளில் இருந்து வரவு காண்பீர்கள். அந்நியர்கள் வழியே ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

திருவாதிரை: வெள்ளியன்று குழப்பங்கள் அதிகரித்தாலும் திடீர் வரவுகளால் சமாளிப்பீர்கள். அதன்பின் உங்கள் திறமை பளிச்சிடும். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

புனர்பூசம் 1, 2, 3: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும் வாரம் இது. பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னை நீங்கும். பணியிடத்தில் உங்கள் நிலை உயரும். அரசு வழியில் எதிர்பார்த்தவை நடந்தேறும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பிற்குரிய தகவல் வரும்.

கடகம்



சுக்கிரன், குரு, செவ்வாய் நன்மை வழங்குவர். சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடம் தீரும்.

புனர்பூசம் 4: வெள்ளியன்று செலவு அதிகரிக்கும். முயற்சியில் தடை உண்டாகும். அதன்பின் உங்கள் செயல்பாடு வெற்றியாகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள்

பூசம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் வாரம் இது. நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அரசுவழி முயற்சிகள் நிறைவேறும். வெள்ளியன்று வரவும் செலவும் போட்டி போடும். அதன்பின் உங்கள் எண்ணம் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

ஆயில்யம்: சப்தம சனியால் சங்கடங்கள் தோன்றிலும், பாக்கிய குருவும் லாப செவ்வாயும் உங்கள் நிலையை உயர்த்துவர். வெள்ளியன்று அத்தியாவசிய செலவு ஏற்படும். சனிக்கிழமை முதல் செயலில் வேகம் இருக்கும். உறவினர், நண்பர்கள் உதவி புரிவர். அந்நிய மனிதர்கள் வழியே ஆதாயம் அதிகரிக்கும்.

சிம்மம்



கேது, புதன், சூரியன், சனி நற்பலன்களை வழங்குவர். சூரிய பகவானை வழிபடுவது நல்லது.
Latest Tamil News

மகம்: வெள்ளியன்று எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த முயற்சி நடந்தேறும். சனி, ஞாயிறு, திங்களில் விரய சந்திரனால் செலவு அதிகரிக்கும். செவ்வாய் முதல் உங்கள் செயல்களில் ஆதாய நிலை உண்டாகும்.

பூரம்: வெள்ளியன்று உங்கள் முயற்சிகளில் ஆதாயம் காண்பீர்கள். அதன்பின் எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். உங்கள் ராசிநாதன் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்ப்பு இன்றி ஆதாயமான நிலை ஏற்படும்.

உத்திரம் 1: பணியில் இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் உண்டான குழப்பம் தீரும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வரவேண்டிய பணம் வந்து சேரும். சனி முதல் திங்கள் மாலை வரை வரவு செலவில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நன்மையாகும்.

கன்னி



குரு நற்பலன் தருவார். துர்கை வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

உத்திரம் 2, 3, 4: கடந்த வாரம் உண்டான நெருக்கடி விலகும். வெள்ளி முதல் திங்கள் மாலை வரை செலவுக்கேற்ற வரவு வந்து கொண்டிருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பொருளாதார நிலை உயரும். செவ்வாய், புதனில் செலவு அதிகரிக்கும்.


அஸ்தம்: உறவினர் ஆதரவுடன் முயற்சிகள் வெற்றியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள். செயல்கள் வெற்றி பெறும். திங்கள் மாலை முதல் வரவு செலவில் கவனம் தேவை.

சித்திரை 1, 2: பெரும்பாலான கிரகங்கள் எதிர்மறையாக இருப்பதால் சங்கடத்தைச் சந்திப்பீர்கள். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்றும். உங்கள் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் இருக்கும். திங்கள் மாலை முதல் புதன் வரை பணநெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

துலாம்



புதன், சுக்கிரன் முன்னேற்றத்தை வழங்குவர்/ விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

சித்திரை 3, 4: கடந்த வார சங்கடங்கள் விலகும் பொருளார நிலை சீராகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். வியாழனன்று திடீர் செலவு தோன்றும்.

சுவாதி: ஏழாமிட ராகுவால் ஆசை அதிகரிக்கும். உங்கள் மனம்போன போக்கில் செல்வீர்கள். ஜென்ம கேது சோதனையை அதிகரிப்பார் என்பதால் கவனம் தேவை. சந்திரன் சஞ்சாரத்தால் புதன் வரை வரவு உண்டு.

விசாகம் 1, 2, 3: நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் லாபாதிபதியும், சுகாதிபதியும் உங்களுக்கு நெருக்கடி தருவர். செயல்களில் போராட்டம் இருக்கும் என்றாலும் புதன் வரை சந்திரனின் சஞ்சாரத்தால் வரவு அதிகரிக்கும். சங்கடம் நீங்கும்.

விருச்சிகம்



சனி, சூரியன், சுக்கிரன், குரு, ராகு நன்மை வழங்குவார்கள். வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதரை எண்ணி வழிபடுங்கள்.

விசாகம் 4: வெள்ளியன்று முயற்சியில் தடைகளை சந்தித்தாலும் சனிக்கிழமை முதல் நினைத்ததை அடைவீர்கள். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு அமையும்.

அனுஷம்: தைரியஸ்தான சனியும் ஆறாமிட ராகுவும் உங்கள் ஆற்றலை அதிகரிப்பார்கள். எதிரிகளால் உண்டான தொல்லைகள் விலகும். சனிக்கிழமை முதல் உங்கள் செயல்கள் லாபமாகும். வழக்கு சாதகமாகும். பொன் பொருள் சேரும்.

கேட்டை: வாரத்தின் முதல்நாளில் உங்கள் செயல்களில் தடையுண்டாகும். பழைய பிரச்னை தலைதுாக்கத் தொடங்கும். அதன்பின் நிலைமை சீராகும் எதிர்பார்ப்பு நிறைவேறும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.



சந்திராஷ்டமம்

1.2.2023 மாலை 4:18 மணி - 4.2.2023 அதிகாலை 3:25 மணி

தனுசு



புதன், சுக்கிரன், செவ்வாய், கேது யோகத்தை வழங்குவர். அனுமனை வழிபடுங்கள்.
மூலம்: வெள்ளியன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை. அதன்பின் திருப்புமுனை உண்டாகும். நெருக்கடி விலகும். எதிர்பார்த்தவற்றில் லாபம் ஏற்படும். விலகிய உறவினர்கள் மீண்டும் தேடி வருவர்.


பூராடம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது. நேர்மையான வழியில் வரவுகள் உண்டாகும். அரசுவழி முயற்சிகளிலும் பலன்கள் ஏற்படும். புதிய நட்பால் சங்கடங்களை விட்டு வெளியில் வருவீர்கள். சனிக்கிழமை வரவுகளில் தடையும் செயல்களில் இழுபறியும் உண்டாகும்.

உத்திராடம் 1: வழக்கத்தை விட வியாபாரம், பணியில் கூடுதல் கவனம் தேவை. முயற்சிகள் நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகள் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஞாயிறன்று செயல்கள் இழுபறியாகும்.


சந்திராஷ்டமம்

5.2.2023 அதிகாலை 3:26 மணி - 6.2.2023 மதியம் 3:06 மணி

மகரம்



சுக்கிரன், நன்மைகளை வழங்குவார். சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.

உத்திராடம் 2, 3, 4: பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்றாலும் சுக்கிரன், சந்திரன் அருளால் நெருக்கடிகளில் இருந்த மீள்வீர்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். வருவாய்க்குரிய முயற்சிகள் வெற்றியாகும். ஞாயிறு, திங்களில் செயல்களில் கவனம் தேவை.

திருவோணம்: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தொழிலை விரிவு செய்வீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். திங்கள், செவ்வாயில் நெருக்கடியை சந்திக்கலாம் கவனம்.

அவிட்டம் 1, 2: ராசிநாதன் பலம் பெற்றிருப்பதால் முயற்சிகளால் நன்மைகளைக் காண வேண்டிய வாரமிது. அரசு வழியிலான முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். செவ்வாய், புதனில் சங்கடங்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம்.


சந்திராஷ்டமம் 6.2.2023 மதியம் 3:07 மணி - 8.2.2023 நள்ளிரவு 1:41 மணி

கும்பம்



குரு, ராகு, சுக்கிரன் நன்மையை வழங்குவர். நவக்கிரக வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

அவிட்டம் 3, 4: குருவருளால் நன்மைகள் அதிகரிக்கும். நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். தொழில், உத்தியோகம் சிறப்படையும். ஜென்ம சுக்கிரனால் வரவுகள் அதிகரிக்கும். புதன் வியாழனில் விழிப்புணர்வு அவசியம்.

சதயம்: மூன்றாமிட ராகுவால் உங்கள் தைரியம் அதிகரிக்கும். முயற்சிகள் லாபமாகும். தொழிலில் இருந்த தடைகள் அகலும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். புதன், வியாழனில் செயல்களில் சங்கடம் ஏற்படும்.

பூரட்டாதி 1, 2, 3: மீன குருவால் நன்மைகள் அதிகரிக்கும். மேஷ ராகுவால் எதிரிகளால் உண்டான சங்கடங்களை முறியடிப்பீர்கள். குடும்பத்தினர் உதவியுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். வியாழனன்று நிதானமுடன் செயல்படுவது நல்லது.



சந்திராஷ்டமம்

8.2.2023 நள்ளிரவு 1:42 மணி - 11.2.2023 காலை 10:04 மணி



மீனம்





செவ்வாய், சனி, சூரியன், சுக்கிரன் நன்மை வழங்குவர். குரு பகவானை வழிபட நன்மையுண்டாகும்.

பூரட்டாதி 4: சந்திர பலத்தால் நன்மை காணும் வாரம் இது. மூன்றாமிட செவ்வாய், லாப சனியின் அருளும் கூடுவதால் உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். அரசுவழியில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், சனியால் நன்மை அதிகரிக்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். அரசு வகையில் உங்கள் முயற்சி நிறைவேறும். வீடு மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும். எட்டாமிட கேதுவால் ஆரோக்கியத்தில் சங்கடம் உண்டாகலாம் கவனம்.

ரேவதி: சந்திர பலத்தால் நன்மைகள் காணும் வாரம் இது. விருப்பங்கள் எளிதாக நிறைவேறும். அரசுவகையில் நன்மைகள் உண்டாகும். வருவாயில் இருந்த தடைகள் விலகும். பணவரவு அதிகரிக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement