ADVERTISEMENT
கண்ணுார், கேரளாவில் கார் தீப்பற்றி எரிந்ததில் கர்ப்பிணி மனைவி, கணவன் பலியாகினர்.
கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆறு பேர், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நேற்று காரில் சென்றனர்.
மருத்துவமனையை நெருங்கிய நிலையில், கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. பின் சீட்டில் இருந்த குழந்தை உள்ளிட்ட நால்வர் உடனடியாக காரில் இருந்து இறங்கி தப்பினர்.
முன் பக்க கதவை திறக்க முடியாததால், காரை ஓட்டி வந்த 35 வயது கணவனும், அவருடைய 26 வயது மனைவியும் தீயில் கருகி பலியாகினர்.
இறந்த பெண் கர்ப்பமாக இருந்ததால் மருத்துவ பரிசோதனைக்கு வந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து கண்ணுார் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீப்பிடித்ததற்கான காரணம் அறிய, கார் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் துறையினர் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!