அயோத்தி, அயோத்தியில் ராமர் கோவில் கர்ப்ப கிரகத்தில் வைக்கப்பட உள்ள ராமர் சிலையை வடிப்பதற்காக, ஆறு கோடி ஆண்டுகள் பழமையான அரிய வகை சாளக்கிராம கற்கள், நேபாளத்தில் இருந்து வந்து சேர்ந்தன.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

முழு வீச்சு
இங்கு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியில், ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஈடுபட்டுஉள்ளது. கோவில் கட்டும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
இந்நிலையில், கோவிலின் கர்ப்ப கிரகத்தில் வைக்கப்பட உள்ள ராமர் மற்றும் சீதை சிலையை வடிப்பதற்காக, அண்டை நாடான நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டத்தில் உள்ள கண்டகி ஆற்றில், இரண்டு பிரமாண்ட சாளக்கிராமம் கற்கள் கண்டெடுக்கப்பட்டன.
26 ஆயிரம் கிலோ எடை
இந்த கற்கள் ஆறு கோடி ஆண்டுகள் பழமையானது என்றும், ஒரு கல் 26 ஆயிரம் கிலோ எடையும், மற்றொரு கல் 14 ஆயிரம் கிலோ எடையும் உடையவை என்றும், கோவில் அறக்கட்டளை அலுவலக பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா தெரிவித்தார்.
இந்த கற்கள் நேபாளத்தில் இருந்து கடந்த மாதம் 25ல் இரண்டு கன்டெய்னர் லாரிகள் வாயிலாக எடுத்து வரப்பட்டு, நேற்று முன்தினம் இரவு அயோத்தி வந்தடைந்தன.
இந்த கற்களுக்கு நேற்று மதியம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 51 வேத பண்டிதர்கள் சுற்றி நின்று மந்திரங்கள் ஓதினர்.
அதன் பின், ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலர்சம்பத் ராயிடம், நேபாளத்தின் ஜானகி கோவிலைச் சேர்ந்த மஹந்த் தபேஸ்வர் தாஸ் கற்களை ஒப்படைத்தார்.
வாசகர் கருத்து (4)
ஒரு சிறிய சாளக்கிராமகல்லை பூஜையரையில் வைத்து வணங்கிவந்தால் அங்கு பகவானே வந்து அமர்வதாக அர்த்தம்.
இது அந்த பகவானுக்கு தெரியுமோ ??
சிலதுகளுக்கு கல்லைக்கண்டாலே அலர்ஜி….
திராவிட மாடல் அரசுக்கு கல்லைக்காண்டால்தான் அலர்ஜி - கள்ளைக்கண்டால் அலர்ஜியே கிடையாது