Load Image
Advertisement

2.650 கிலோ பிரியாணி சாப்பிட்ட சாப்பாட்டு ராமனுக்கு முதல் பரிசு!

Tamil News
ADVERTISEMENT
நாமக்கல்:நாமக்கல்லில் நேற்று நடந்த போட்டியில், 23 வயது வாலிபர், 2.650

கிலோ பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார்.நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில், நேற்று பிரியாணி சாப்பிடும் போட்டி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு செய்தவர்களில், குலுக்கல் முறையில் 40 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நேற்று மதியம் போட்டி நடந்தது.

இதற்கு நுழைவுக் கட்டணமாக, 99 ரூபாய் வசூலிக்கப்பட்டது. போட்டி துவங்கியதும், அனைவரும் வேகமாக பிரியாணி சாப்பிட்டனர். இனிப்பு, இரண்டு முட்டை, 'லெக் பீஸ்' உடன் பிரியாணி
பரிமாறப்பட்டது.இருபது நிமிடத்தில் யார் அதிகளவு பிரியாணி சாப்பிட்டனரோ அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.இப்போட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்த சரவணன், 23, அதிகளவாக, 2.650 கிலோ பிரியாணி சாப்பிட்டு முதல் இடத்தை பிடித்தார்.
இரண்டாம் இடத்தை, 2.350 கிலோ பிரியாணி சாப்பிட்ட ஜீவாவும்; மூன்றாவது இடத்தை, 2.300 கிலோ சாப்பிட்ட கவினும் பிடித்தனர். முதல் இடத்தை பிடித்த சரவணனுக்கு ரொக்கப் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து (12)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    எக்கு தப்பா எலும்பு , பிரிஞ்சி இலை போயி மாட்டிட போவுது

  • திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா

    முன்பெல்லாம் இட்லி சாப்பிடும்போட்டிதான்(நம் பாரம்பரியம் முழுதும் நசுக்கப்படாதவரை) சாப்பாடு போட்டியில் இடம்பெரும், இப்போது பிரியாணி சாப்பிடும்போட்டி, நம்பாரம்பரியம் கிட்டதட்ட நசுக்கப்பட்டுவிட்டது எனவே கொள்ளலாம், பிரியாணி சாப்பிட ஏன் சாப்பாட்டுராமன் என தலைப்பு, சாப்பாட்டுசையது என வைக்கவேண்டிதுதானே?

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    தினம் ஒரு போட்டி நடத்தலாம்

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் இப்போ எங்க பார்த்தாலும் புற்றீசல் போல பிரியாணிக் கடைகள் முளைத்து வருவதும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பிரியாணியை வளைத்துக் கட்டுவதும் மிகவும் அதிகரித்து வருகிறது .பல பிரியாணிக் கடைகளில் சுத்தம் ,சகாதாரம்,தரம் ,சுவை மிகப் பெரிய கேள்விக்குறியாகி விட்டது வேதனை .அசைவ உணவு பிரியாணிகளுக்கு பல மக்கள் அடிமையாகி வருவது உடல் நலக் கேடுகளுக்கு வழி வகுக்கும் . விலைவாசி தாறுமாறாக நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எங்கும் உணவு தயாரிப்பதில் கலப்படங்கள் ,தில்லுமுல்லுகள் அதிகரித்து வருகிறது .சமைக்க விருப்பம் இல்லாத பலருடைய சோம்பேறித்தனத்தால் கடைகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.நாவிற்கு அடிமையாகிவரும் மக்களால் பெரும்பாலான பிரியாணிக் கடைகளின் காட்டில் அடைமழை தான் .

  • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

    இப்போ தெரியுதா டுமீளன் பிரியாணிக்கும், சாராயத்திற்கும் திட்டமிட்டு அடிமையாக்கப்பட்டு உள்ளான் என்பதை? 99ரூபா கொடுத்து உயிரே போனாலும் பரவாயில்லை என்று 3. 4. கிலோ பிரியாணி தின்று தீர்க்கும் இந்த டுமீளன் கும்பல் 200.ஊவா மற்றும் கலப்பட சாராயத்திற்காக ஏன் தன் குடும்பத்தையே ...கொடுக்க மாட்டான்? இவர்கள் இருக்கும்வரை ஓங்கோல் வந்தேறி ஊழல் திராவிடியா குடும்பதிற்கு கவலையில்லை, கலப்பட சாராயத்தையும் தொடமாட்டான் அதான் அவனுகளை கண்டால் இந்த 21.பக்க திராவிடியாக்களுக்கு, டுமீளங்களுக்கு ஆவறதில்லை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement