புதுடில்லி: அதானி குழும முறைகேடு தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பார்லிமென்ட் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை தெரிவித்தது. இதனால், அந்த நிறுவனத்தின் பங்குகளை, சரிவை சந்தித்து வருகிறது. இது குறித்து, பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

பார்லியில் இந்த விவகாரத்தை எழுப்புவது மற்றும் நிலைப்பாடு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக, திரிணமுல் காங்கிரஸ்,சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதானி பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என ராஜ்யசபாவில், கார்கே, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், டிஆர்எஸ் கட்சியின் கேசவராவ் ஆகியோர் நோட்டீஸ் அளித்தனர்.
கார்கே அளித்த நோட்டீசில், '' பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிறுவனத்தின் பங்குகளை, பொதுத்துறை வங்கிகள், எல்ஐசி மற்றும் நிதிநிறுவுனங்கள் பங்குகளை வாங்கி பொது மக்கள் முதலீடு செய்த பணத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க வேண்டும். இதற்கு கேள்வி நேரம், ஜீரோ ஹவரை ஒத்தி வைக்க வேண்டும் '' எனக்கூறப்பட்டு இருந்தது.
லோக்சபாவில் காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாக்கூர் அதேபோன்ற நோட்டீசை அளித்தார். இதனை வலியுறுத்தி நோட்டீஸ் அளித்தார். இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
வாசகர் கருத்து (29)
Hindenburg துவக்கம் 2017, தனியார், 9 பணியாளர்கள். Initial disclosure. - Adani group co. Through US traded bonds and non Indian traded derivative instruments. Valuation security traded outside India. Not a recommendation... opinion. எதிர் கட்சிகள் படித்து புரிந்து வாதிட தகவல்.
உண்மையான நிலை தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் கூச்சலிடுகிறார்கள் முழுக்க முழுக்க அமெரிக்காக்க ஷேர்மார்கெட்டின் சித்து விளையாட்டு நம் இந்தியன் மேல் நிலயில் வருவது பிடிக்காமல் அதுவும் அமெரிக்காவின்பெரிய அளவில் டாலர்கள் அவர் மூலம் இந்தியாவிற்க்கு வருவதை தடுக்க செய்யும் முயற்சி தகிடுத்தனம் சில நாட்களில் அவரின் பங்க்கு வர்த்தகம் நிமிர்ந்து விடும் . .
தனி மனித பிரச்னை தேவையில்லாமல் பாராளுமன்றத்தில் குழப்ப நினைக்கிறார்கள் இவர்கள் மக்கள் நலனுக்கு குரல் கொடுக்க மாட்டார்கள் காழ்ப்புணர்ச்சியுடன் பொறுப்பற்ற முறையில் பாராளும் மன்றத்தை நடத்த விடாமல் பொது மேடையில் கூச்சலிடுவது போனற செயல்கள் தான் செய்வார்கள்
இவர்களது நோக்கமே ....கேண்டீனில் ...வடை போண்டா....சாப்பிட்டு விட்டு....வெளியே போய்...காந்தி சிலை முன்பு அமர்ந்து....கதை பேச வேண்டியது ....அதை தான் இவர்கள் செய்து வருகிறார்கள்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அதானியும் மோஸ்ட் வான்டட் லிஸ்டுல சேர்ந்துட்டாரு... .பரிதாபம்...