Load Image
Advertisement

நேரடி பிரசாரத்தை தவிர்க்கும் இளங்கோவன்!

Tamil News
ADVERTISEMENT
''நேரடி பிரசாரத்தை தவிர்க்கிறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''ஈரோடு கிழக்கு தொகுதியில போட்டியிடுற, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு அறிமுகம் தேவை இல்லைங்க... அதுக்காக, பிரசாரத்துக்கு போகாம இருக்க முடியுமா...

''ஆனாலும், மகன் இறந்த துக்கத்துல, கடுமையான மன அழுத்தத்துல இருக்காருங்க... அவருக்கு, 'வீசிங்' பிரச்னை வேற இருக்குதாம்... சமீபத்துல தான் இதய அறுவை சிகிச்சை வேற செஞ்சிருக்கார்... இதனால, சோர்வா இருக்காருங்க...

''துாசு ஆகாதுங்கிறதால வீதி வீதியாக, வீடு வீடாக போய் ஓட்டு கேட்கிறதை தவிர்க்கிறாருங்க... பொதுக்கூட்டம், அரங்க நிகழ்வுகள்ல கலந்துக்கிறதோட, முக்கிய பிரமுகர்களிடம் நேரிலும், போன்லயும் ஆதரவு கேட்கிறாருங்க...
Latest Tamil News
''இதனால, தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சோர்வடைஞ்சிட்டாங்க... 'வேட்பாளரை களத்துக்கு அழைச்சிட்டு போகாம பிரசாரம் எடுபடாதே'ன்னு பயப்படுறாங்க...

''அதே நேரம், இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை, பிரசாரத்துக்கு அழைச்சிட்டு போய், காங்கிரஸ்காரங்க சமாளிச்சுட்டு இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.


வாசகர் கருத்து (10)

  • Unmai vilambi - Chennai,இந்தியா

    Congress la vera alle illaya erodela

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    74 வயசாயிடுச்சு. வீட்லே கோழி பிரியாணி சாப்பிட்டுட்டு தூங்கலாம்.. 😊😊

  • அநாமதேயம் - ,

    பிரச்சாரம் செய்யவே முடியாத இந்த நபர் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும்.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    வேற யாருமே இல்லையா? உடல்நிலை சரியில்லாதவரை ஏன் நிறுத்த வேண்டும். அவருக்கும் சுய சிந்தனை இல்லையா? இல்லை ஆட்சியே சில மாதங்கள்தான், அதுவரை இருந்துவிட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்களா?

    • ஆரூர் ரங் - ,

      இன்னொரு 2000 திருவிழாவுக்கு😇 ஏற்பாடு நடக்க வேண்டாமா?

  • sankar - Nellai,இந்தியா

    முழு நாத்திகரான இவரை(இளங்கோவன்) தோற்கடிக்க வேண்டியது ஒவ்வொரு இந்து நண்பர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement