மறுவாழ்வு மையத்தில் போதை சிறுவன் இறப்பு
சோழவரம், கும்மிடிப்பூண்டி அடுத்த, மெதிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மகன் மனோஜ்குமார், 14. தலையாரிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தான்.
போதைக்கு அடிமையாகி, பள்ளிக்கு செல்லாமல் இருந்தான். அவரது தாய் அகிலா, கடந்த மாதம், 21ம் தேதி, சோழவரம் அடுத்த, அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் 'குடி'போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, பள்ளி மாணவன் மனோஜ்குமார், கழிப்பறையில் மயங்கி விழுந்தான். அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தன் மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாணவனின் தாய் போலீசில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!