புதுடில்லி:புதிய வரி நடைமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.5 லட்சம் வரை இருந்த வரம்பு தற்போது ரூ. 7 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சத்தை கடக்கும் பட்சத்தில்,
*3 லட்சம் வரை வருமான வரி இல்லை
*3 லட்சம் முதல் 6 லட்சம் வரை 5 சதவீத வருமான வரி
*6 லட்சம் முதல் 9 லட்சம் வரை 10 சதவீதம்
*9 லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 சதவீதம்
*12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 சதவீதம்
*15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வருமான வரி. இவ்வாறு நிர்மலா சீதாராமன்
அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (26)
மத்திய நிதி அமைச்சர் வழக்கம் போல மாதாந்திர சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு "அல்வா" கொடுத்துவிட்டது வேதனை .இந்தியாவில் வெறும் இரண்டு சதவீத மக்கள் மட்டுமே அரசுக்கு வருமானை வரியைக் கட்டுகின்றனர்,மீதமுள்ள தொன்னூற்றி எட்டு சதவீதம் மக்கள் நிதி அமைச்சருக்கு வழக்கம் போல "அல்வா"கொடுத்துவருகின்றனர் .
போற்ற தக்க மத்திய நிதி நிலை அறிக்கை. மத்தியதர மக்களின் விரோதி ப .சி . அவர் (ன்) வருமான வரி வரம்பை உயர்த்தவெ மாட்டார் . சப்பை கட்டாக அவர்களிடம் மிருந்து தான் வருமானாதை எளிதாக கறக்க முடிகிறது. மற்றவர்கள் எளிதாக தெரிந்தும் தெரியாமலும் ஏமாற்ற முடிகிறது என்று மிழற்றுவார்
"புதிய வரி நடைமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு" .என்பது தலைப்புச் செய்தி ஆனால் உள்ளே "ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சத்தை கடக்கும் பட்சத்தில், 3 லட்சம் வரை வருமான வரி இல்லை 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை 5 சதவீத வருமான வரி 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை 10 சதவீதம்.." குழப்பமாக இருக்கிறதே மேலோட்டமாகப் பார்த்தால் 3 லட்சம் வரை மட்டும்தானே வரி விலக்கு? அதற்கு மேல் வரி குறைப்பு என்றுதானே இருக்க வேண்டும் புதிய வரிக்கு எல்லோரும் மாறிய பின் பழைய வரிக்காக கதவு மூடப்படும் என்பது சின்னக்குழந்தைக்கும் தெரியுமே
பழையமுறை அல்லது புதியமுறைக்கு மாறுவது நமது இஷ்டம் என்பதால் எதில் அதிக சலுகை என்று தோன்றுகிறதோ அதைதேர்ந்துஎடுக்கலாம். அடுத்த ஆண்டு மீண்டும் மாற்றிக்கொள்ள முடியும்...
இந்தியாவில் விலைவாசி குறையுமா.... ???