ADVERTISEMENT
சென்னை: 'கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட, சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஐந்து பேர், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சென்னை மேற்கு மாவட்டத்தில் ஜன., 29ல் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது, மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், மாநில நெசவாளர் பிரிவு செயலர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் சசிதரன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் புருஷோத்தமன், செயற்குழு உறுப்பினர் சென்னை சிவா ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால், அவர்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (6)
இருக்கிறவங்களையும் அனுப்பிட்டு ? அப்புறம் ?
கட்சி தமிழ்நாட்டில் இடம்பிடிக்கும்வரை பொறுமையாக இருக்கலாம்தானே. அதற்குள் ஏன் குளறுபடிசெய்து எல்லாவற்றையும் இழக்கிறீர்கள்.?.கைக்குள் வந்ததை நழுவவிட்டீர்கள்.
அறுபடை சரவணன் ஒரு குப்பைத்தொட்டி. எப்படி கழுவி, எப்படி சுத்தம் செய்து, எங்கே வைத்தாலும், குப்பைத்தொட்டி குப்பைத்தொட்டிதான். கசங்கி விழும் பணத்தை எதிர் நோக்கி தான் இந்த குப்பைத்தொட்டி இருக்கும்.
வார் ரூமில் கட்சி வீடியோ பாத்தாங்களா ?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தேன் கூட்டை நோக்கி எப்போதும் கல்லெறிந்து கொண்டே இருந்தால் எப்ப தேன் உருவாகும்?