மாநாடு மேடை மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கு 100 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு செப்பனிடப்படுகிறது. கழிப்பறை வசதி மற்றும் வாகனம் நிறுத்துவதற்காக கூடுதலாக, 50 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, அதற்கான பணியும் நடந்து வருகிறது.
'தங்கள் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கான மாநாடு என்று ஒன்று கூடி, தீவிரவாதத்தை விளைவிக்க முயற்சி எடுப்பர். எனவே, மாநாட்டின் நோக்கத்தை புரிந்து, அதை தடுக்க வேண்டும்' என, பா.ஜ., செயற்குழு உறுப்பினரும், சிந்தனையாளர் பிரிவு பார்வையாளருமான கல்யாணராமன், அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு அக்., 23ல், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஜமேஷா முபின் என்ற பயங்கரவாதி, காரில் சிலிண்டர் வெடிகுண்டை ஏற்றிச் சென்றபோது, அது வெடித்து சிதறியது. ஜமேஷா முபின், உடல் துண்டு துண்டாகி இறந்து போனார்.
விசாரணையில் ஈடுபட்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பலரையும் கைது செய்தனர். ஜமேஷா முபின், இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த ஜாக்ரன் ஹாஸ்மியோடு தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டது.
இந்த ஜாக்ரன் ஹாஸ்மி தான், இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்து, 200க்கும் அதிகமானோரை கொன்றவர். இப்படிப்பட்ட பலரும், தமிழகம் மற்றும் இந்தியாவில் செயல்படும் இயக்கங்கள் பலவற்றோடும் தொடர்பில் உள்ளனர்.
இந்த சூழலில், தமிழக தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள், 'மூடநம்பிக்கை ஒழிப்பு' என்ற பெயரில் திருச்சி சிறுகனுாரில் மாநாடு நடத்துகின்றனர். அந்த மாநாட்டுக்கு, சித்தார்த்தன் என்பவரிடம் இருந்து நிலம் பெற்று உள்ளனர்.
அந்த நிலத்தை வாங்கி கொடுத்தவர், அமைச்சர் நேரு. இதற்காக, சித்தார்த்தனுடன் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர், நேரு முன்னிலையில் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
மாநாட்டின் வாயிலாக, முஸ்லிம் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க போவதாக கூறினாலும், அங்கே பயங்கரவாத கோஷத்தைதான் வலியுறுத்துவர் என்பது எல்லாரும் அறிந்ததுதான்.
இது அரசுக்கும் தெரியும். இருந்தும், மாநாட்டுக்கு இடம் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட எல்லா பணிகளுக்கும் அமைச்சர் ஒருவரே உதவுகிறார் என்றால், அரசு தரப்பில் உதவுவதாக தானே அர்த்தம். அதனால்தான், இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வலியுறுத்தி, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் செய்தி தொடர்பாளர் அல் அமீன் கூறியதாவது: வரதட்சணை, பெண் கல்வி உள்ளிட்ட பல விஷயங்களில், முஸ்லிம் மதத்தை பின்பற்றும் மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கையை போக்கும் விதமாக நடத்தப்படும் மாநாட்டால் யாருக்கு என்ன சங்கடம்?சட்ட ரீதியில் தான் மாநாடு நடத்துகிறோம். அதற்காக, தனியாரிடம் இருந்து நிலம் உரிய முறையில் பெறப்பட்டுள்ளது; ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அமைச்சர் நேருவிடம் மாநாட்டுக்கு உதவ கோரினோம். அவரும் சில உதவிகளை செய்துள்ளார். அதற்காக, அவரை கொச்சைப்படுத்தி பேசுவதும், சர்ச்சையில் இழுத்து விட நினைப்பதும் தவறு.முஸ்லிம் இயக்கங்கள் என்றாலே, தீவிரவாத செயல்பாடுகளுக்கு துணையாக நிற்கும் என்பது, பா.ஜ., தரப்பில் கிளப்பி விடப்படும் புரளி; அதில் எந்த உண்மையும் இல்லை.ஜமேஷா முபின், ஜாக்ரன் ஹாஸ்மி உள்ளிட்டோருக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், பல மாநாடுகளை நடத்தியுள்ளது. ஒரு இடத்திலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை எழுந்ததில்லை; சிறு சலசலப்பு கூட எழுந்ததில்லை.மாநாடு முடிந்ததும், அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுத்து விட்டுதான், ஒவ்வொரு முறையும் வெளியேறி இருக்கிறோம். பா.ஜ.,வின் விமர்சனங்களில் கவனம் செலுத்தி, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --
வாசகர் கருத்து (42)
முதல் முறையாக, ஒரு நல்ல கருத்து உங்களிடம் இருந்து, என்ன ஆயிற்று?
மூட நம்பிக்கை என்பது எல்லா நாடுகளிலும் ,எல்லா மதத்திலும் வளர்ந்த நாடுகள் உட்பட நீக்கமற நிறைந்து உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை .
எப்படி குண்டு செய்யணும்னு விளக்கம் பெறுவதற்காகவா?
மத மூடநம்பிக்கை மாநாடுன்னு வேண்டுமானால் நடத்துங்கள். எல்லா மதத்தில் இருந்தும் ஆட்களை கூப்பிட்டு வாருங்கள்.
எல்லா மதத்திலிருந்து ஆட்களை கூப்பிட்டு வந்தால் மத துவேசம் நடத்துகின்றார்கள் என்று கூறி வழக்கு பதிவிடவா? அவரவர்கள் மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் பற்றி அந்தந்த மக்கள் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தட்டும். அணைத்து சமூக மக்களுக்கும் அழைப்பு விடுத்து இஸ்லாம் சம்மந்தம்மான சந்தேகங்கள், மற்றும் அவர்களின் மனதில் இஸ்லாமியர்கள் பற்றிய கருத்துக்கு விளக்கம் அழிக்கும் நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடந்து கொண்டு தானிருக்கு. அதில் சந்தேகம் கேட்டு பலர் விளக்கம் பெற்றுள்ளார்கள்.
ஹா ஹா ஹா. சகதியில் புரண்டு கொண்டு சுத்தமாக முடியாது. மூடநம்பிக்கை என்ற அடிவாரத்தில் மேல் கட்டுக்கதைகளை வைத்து புனையப்பட்ட மதம். அதிலே இருந்து கொண்டு மூடநம்பிக்கையை பற்றி விவாதிக்க முடியாது. குண்டுசட்டிக்கு வெளியே உலகம் இருக்குன்னு முதலில் ஒத்துக்கொள்ளணும்.
நல்ல வேடிக்கை.
அப்போ மொதல்ல இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு சிலைகளை வைப்பதை ஒழியுங்க ,அதுதான் மிகப்பெரிய மூட நம்பிக்கை