சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச்சின்னத்தை கடலில் வைக்க நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். கடலில் வைத்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் எனவும், கடலில் வைக்காமல் மாற்று இடத்தில் வைக்கலாம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜன.,31) நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி, ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இதில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பும், ஆதரவும் பதிவானது. எதிர்ப்பு தெரிவித்து பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
கடலில் வைக்க எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தினை தெரிவித்துவிட்டு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாற்று கருத்து கூறினாலே கூச்சலிடுவது அநாகரீகம். கூச்சலுக்கு பயப்பட மாட்டோம்.
கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பதை ஏற்கிறோம். ஆனால் அதனை கடலுக்குள் வைப்பதை தான் எதிர்க்கிறோம். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். அதனை பார்வையிடும் மக்கள் குப்பைகள், பிளாஸ்டிக்குகளை கடலுக்குள் போடுவார்கள். இதனால் கடல் மாசு ஏற்படும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
போராட்டத்தை முன்னெடுப்போம்
நிதி இல்லை, நிதி இல்லை எனக்கூறுகின்றனர், ஆனால் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மட்டும் எங்கிருந்து காசு வருகிறது? பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் வைப்போம் என அடம்பிடிக்க காரணம் என்ன? பேனா நினைவுச்சின்னத்தை மாற்று இடத்தில் வைக்க வேண்டும்.
கடலுக்குள் நினைவுச்சின்னம் வைக்க விடாமல் கடுமையான போராட்டத்தை முன்னேடுப்போம். நினைவுச்சின்னத்தை மதுரையில் அமையவுள்ள கருணாநிதி நூலகத்தில் அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (20)
கோவையில் ஒரு சாலைகூட உருப்படி இல்லை. முதலில் அதை சீரமைக்க உடனடி ஏற்பாடு செய்யுங்கள். தினம்தினம் திண்டாடுகிறாேம்
ராஜாஜி, காமராஜர், அண்ணாதுறை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, போன்ற தலைவர்களால் தேசிய அளவில் தமிழகம் பெருமை அடைந்தது ஆனால், சீமான் மற்றும் ........ சில தலைவர்களின் செயல் வேதனை அளிக்கிறது.
கருத்து கேட்பு கூட்டம்னு ஒரு களவாணி கூட்டத்தை உள்ள விட்டு கத்திகிட்டே இருக்கானுங்க ...இதுக்கு எதுக்கு கூட்டம் போடணும் ? அதான் ஏக்கர் ஏக்கரா ஆட்டைய போட்டு வச்சு இருக்கீங்களே அங்க அந்த பேனாவை வச்சுக்குங்க ..இல்ல வேளச்சேரி , சித்தரஞ்சன் சாலை , சி.ஐ.டி காலனி , அல்வார்பேட் , அண்ணாமலை புரம் , ஈ.சி .ஆர் என பல இடங்களில் பினாமி பெயர்களில் மாலிகைகளை கட்டி வச்சி இருக்கீங்களே அதுக்குள்ளே வச்சுக்குங்க . அதுவும் இல்லன்னா அறிவில்லாத ஆலயத்தில் முன்னாடி நட்டு வச்சுக்குங்க ..இல்ல அந்த திருட்டு கேபிள் காரன் இடத்திலாவது வச்சுக்கங்க ...இல்லன்னா உங்க மண்டையில நட்டு வச்சுக்கிட்டு போங்க ..அதை ஏன்டா கடலுக்குள்ள வைக்கணும்னு அடம் பிடிக்கிறீங்க ? அந்த இடத்தையும் அப்பன் பேரை சொல்லி ஆட்டைய போடணும் ..டிக்கெட் கட்டணம் வச்சு வசூலிக்கனும் , வழக்கம்போல அறக்கட்டளையினை ஆரம்பிச்சு அதுல கொள்ளையடிக்கிரா காசை கணக்கு காட்டி வெள்ளையா மாத்தணும் ...ஹிந்தி தெரியாது போடான்னு வாசகம் போட்டுக்கிட்டு ஹிந்தி பள்ளி கூடங்களை நடத்தணும் , ஹிந்தி சினிமாக்களை விநியோகிக்கணும்?
அறிவில்லாத ஆலயத்தில் வைக்கலாம். பொருத்தமான இடமாகவும் இருக்கும். ஆனால் கட்சிப் பணத்தில் மட்டுமே வைக்கவேண்டும்.
கெடக்கறது எல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனைலே வை என்பதைப்போல, தமிழகம் எக்கேடு கேட்டால் என்ன கிடக்கிற பணத்தை வாரிச்சுருட்டுவோம் அல்லது இப்படி ஊதாரித்தனமாக செலவிடும் என்பதுதான் திமுக திராவிடன் மாடல். சீமான் சொன்னது. வரும்காலத்தில் பட்டத்து இளவரசர் தந்தைக்கு (ஈ.வே.ரா இல்லைப்பா) சின்னம் அமைக்க கருதினால் என்னவைப்பார் என்று. பதில் hilerious