எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்: நாளை முதல் துவக்கம்

ரேஷன் பொருட்களை, கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடையில் மட்டும் வாங்க முடியும். இதனால், இடம்பெயரும் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். இதனால், கார்டுதாரர்கள் எந்த இடத்திலும் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் வசதி துவக்கப்பட்டது.
பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில், 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கம், கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.

பரிசு தொகுப்பும், இம்மாத பொருட்களும், ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கிய கடையில் மட்டும் வழங்கப் பட்டன.
பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்து விட்டதால், நாளை முதல், அடுத்த மாத உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
அவற்றை கார்டுதாரர்கள்முகவரிக்கு ஒதுக்கிய கடை மட்டுமின்றி, எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம்.
வாசகர் கருத்து (4)
இந்த ரேஷன் கடை சமாச்சாரமே ஒரு வீண் என்று பல பேர் அபிப்பிராய படுகிறார்கள்+++பண்டங்களை கொள் முதல் செய்வது,, அவற்றை குடோன்களில் பாது காப்பது,, பிறகு ரேஷன் கடைகளுக்கு லாரியில் எடுத்துச் செல்வது இப்படி எத்தனையோ செலவினங்கள் என்பது ஒரு வெள்ளை யானை தான் +++++இதில் கடத்தல் வேறு,,அதற்கு துணை புரியும் அதிகாரிகள்+++++ஒரே குடும்பத்தை நான்கைந்து காடுகள்+++இவை போன்ற அன்றாட முறைகேடுகளை இன்று வரை முழுதும் ஒழித்துக் கட்ட முடியவில்லை+++அரிசி கார்டு வைத்திருப்போர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வசதி படைத்தவர்கள் தான்++++மான்ய விலை பலனை அனுபவிப்பது மிகச் சிறிய எண்ணிக்கை தான்+++++
நகரங்களில் வேண்டுமானால் கொடுப்பார்கள் கிராமங்களில் கொடுக்கமாட்டார்கள் எங்கள் கிராமத்தில் இரண்டு கடைகள் உள்ளன எனக்கு அருகில் உள்ள கடையில் ஒருமுறை கொடுத்தார்கள் அடுத்த முறை ,முன்பு வாங்கிய கடைக்கே செல் என்று சொல்லிவிட்டார்கள்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
ரேஷன் கார்டு விநியோகத்தை தயவு தாட்சண்யம் இன்றி முறைப் படுத்த்தினால் தான் விமோசனம்+++இல்லையேல் கணக்கில்லாத கோடி பணம் கேட்பாரற்று வீணாக்கிக் கொண்டு தான் இருக்கும்+++கட்டுப் படி ஆகுமா?