ADVERTISEMENT
மேலுார், : மேலுார் அருகே கொங்கம்பட்டி கொள்முதல் நிலையத்திற்கு லாரிகள் வராததால் பத்தாயிரத்துக்கும் அதிகமான நெல் மூடைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.
கொங்கம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல் நெல் மணிகள் மழையில் நனைத்தும், வெயிலில் காய்ந்தும் வீணானது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஜன.,26 நெல் கொள்முதலை துவங்கியவர்கள் மீண்டும் நெல் கொள்முதலை நிறுத்தியுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஒரு லாரிக்கு 500 மூடைகள் வீதம் இரண்டு லாரிகளில் நெல் மூடைகளை கோடவுனிற்கு ஏற்றிச்சென்றனர். அதன்பிறகு லாரிகள் வராததால் எடை போட்டு நெல் மூடைகளை ஏற்றவில்லை. தவிர எடைபோட வேண்டிய நெல்மணிகளையும் எடை போடாததால் மழையில் நனைந்து வீணாகிறது.
நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தரும் எடை போடுவதற்கு மறுக்கிறார். அதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடைகள் வீணாகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் லாரி பற்றாக்குறை என்கின்றனர். நெல் மூடைகள் தேங்காமல் கொண்டு செல்ல லாரிகளை அனுப்பி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கலெக்டர் அனீஷ்சேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!