ADVERTISEMENT
சென்னை: பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு மே 17ம் தேதியும் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை 2022- 23ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3 வரையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், செய்முறை தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 6 முதல் 10ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும்.
பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் ஜன.,30, 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் தனித் தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதன்படி, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு மே 17ம் தேதியும் முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (3)
இதையெல்லாம் அமைச்சர்கள் சொல்வார்கள்? பிறகு CEO, DEO க்கு எல்லாம் என்ன வேலை? அரசியல்வாதிகள் பாலிசி மட்டத்தில் இங்கு விட்டு அரசு அதிகாரிகளை இதுமாதிரி ஆப்பரேஷனல் லெவலில் இருக்க வைக்கலாம். இது மாதிரிதான் ஆணை தண்ணீர் திறந்துவிடும் படலம். யாரு என்ன பண்ணறதுனு தெரியாம, யார் செய்வதில் வருவார் என்பதைத்தான் பார்க்கின்றனர்
இங்கு முன்கூட்டி தேர்வுகள் நடத்துவதால், தாமதமாக தேர்வு நடத்தி, மிக தாமதமாக முடிவுகள் வெளியிடப்படும் CBSE ன் மாணவர்களுக்காக அக்டோபர் வரை நம் மாணவர்கள் மேல்படிப்பிற்காக காத்திருக்க வேண்டி இருக்கிறது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணாவின் அகில உலக ரசிகர் மன்ற தலைவர் அன்பில் மாதேசு சாரி மகேசு பொய் மொழி பள்ளி கல்வித்துறை அமைச்சர். செம்மண் திருடர் உயர் கல்வித்துறை அமைச்சர். விளங்கிடும் டுமிழ்நாடும் அதன் எதிர்காலமும்.