புதுடில்லி: இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தொடர்பான எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் 3 நாட்களில் முடிவெடுக்கும்படி இந்திய தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்பினாலும், தேர்தல் கமிஷன் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுப்பதாகவும், தம்மை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் எனவும் அதிமுக.,வின் பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, இரட்டை இலை சின்னம் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் தொடர்பாக 3 நாட்களில் முடிவெடுக்கும்படி இந்திய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை பிப்.,3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
வாசகர் கருத்து (12)
அடுத்தவர்களை கேட்கும் முன்பு விசாரனை முடிந்துவிட்ட ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கியிருக்கலாமே
உச்சநீதிமன்றம் ஒன்றியத்துக்கு பாதை அமைத்து கொடுக்கிறது. மூன்று நாட்களில் ஒரு சார்பு ஆணையம் எப்படி முடிவு எடுக்கும்? தள்ளி போடவோ இல்லை மறுக்கமுடியாத காரணத்தை சொல்லியோ உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் வாங்கும்.
விரைந்து முடிவு எடுங்கப்பா இரட்டை இலையா ? அவுங்க சின்னம் என்னது ? தெரியாம மக்கள் குழம்பறாங்க சார்.
நேரத்திற்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு முடிவு எடுக்கும் அரசியல் கட்சிகள் மனு மீது ECI முடிவு எடுப்பது கடினம். (பணம், பதவி பெற்றால்) MGR கனவில் வந்து ops, eps இணைய வேண்டும் என்றார் என்பார்கள். கலைஞர் தாய் கழகம் திரும்ப கட்டளை என்பார் ops. ரெய்டு என்றால் தேசிய கட்சியில் இணைய போகிறோம் என்பார்கள். ( ECI )தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சாசன அமைப்பு. ECI க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டி, வக்கீல் மனு தாக்கல் செய்தது சரியா?
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
தேர்தல் கமிஷனுக்கு 3 நாள் டைம். அதில் ஒன்றரை நாள் டெல்லியில் ஆலோசனை நடக்கும். லாஸ்ட் சான்ஜ் to EPS. திமிரினால் .. இலை முடங்கும்..