ADVERTISEMENT
மாவட்டம் முழுவதும் அதிக பரப்பளவில் விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.பயிரிட்ட பொருட்களை அறுவடை செய்து சந்தைகளிலும் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
பயிர்களை விவசாயம் செய்யும் போது அதிகப்படியான நோய்கள் தாக்குகின்றனர்.நோய்களிலிருந்து விவசாய பயிர்களை காப்பாற்றுவதற்காகவும், விளைச்சலை அதிகப்படுத்தவும் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
அப்போது விவசாய நிலங்களில் அதை தெளிக்கும் போது விவசாயிகள் வெறும் கை களில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அணியாமல் தெளிக்கின்றனர்.
பயிர்களில் தெளிக்கும் போது பூச்சிக்கொல்லி மருந்துகள் விவசாயிகளின் கை,கால்கள்,உடல்களில் படுகிறது.அப்போது அவர்களுக்கு தோல் சம்பந்தபட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது.சில நேரங்களில் மருந்து தெளிக்கும் போது விவசாயிகளின் கண்,மூக்கு உள்ளிட்ட பகுதிகளுக்குள் சென்று பெரிய பிரச்னை களில் கொண்டு விடுகிறது.இதை நேரடியாக சுவாசிப்பதால் சுவாசக்கோளாறுகள், நுரையீரல் பாதிப்புகளும் ஏற்படுகிறது.
வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்தால் மட்டும் போதாது.அவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்களை வழங்கவேண்டும்.
அதுமட்டுமின்றி மருந்து தெளிக்கும் போது விவசாயிகள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறை களை தெளிவுப்படுத்த வேண்டும். விவசாயிகளிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது தான் இதற்கு காரணம்.இதுபோன்ற பிரச்னை களில் விவசாயிகள் சிக்காமல் இருக்க கிராமங்கள் தோறும் அதிகாரிகள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
தொடரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!