Load Image
Advertisement

பொழிவு பெறுமா கர்னல் ஜான் பென்னிக்குவிக் பஸ் ஸ்டாண்ட் நடவடிக்கை எடுக்காத நகராட்சி

Tamil News
ADVERTISEMENT


தேனி -தேனி அல்லிநகரம் நகராட்சி கர்னல் ஜான் பென்னிக் குவிக் பஸ் ஸ்டாண்ட் போதிய பராமரிப்பு இன்றி பொழிவிழந்து காணப்படுகிறது. நகராட்சியின் இலவச கழிப்பறையும் சுகாதாரமின்றி காணப்படுகிறது.

இதனால் பயணிகள் அவதி தொடர்கிறது. வழக்கம் போல் நகராட்சித் தலைவர், கமிஷனர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி பென்னிக்குவிக் பஸ் ஸ்டாண்ட் வெகு நாட்களாகவே அடிப்படை சுகாதாரம் இன்றி இருக்கிறது. கம்பம் வழித்தடம் பஸ் நிறுத்தம் அருகே பயணிகள் அமரும் காத்திருப்போர் இருக்கை வளாகத்தில் மது பாட்டில்களும், சிகரெட் பாக்கெட்டுகளும் நிரம்பி உள்ளது. இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் சிலர் குடித்து விட்டு அங்கேயே வாந்தி எடுத்து படுத்துவிடுகின்றனர்.

இதனால் பெண்கள், சிறுவர்கள் முகம் சுளிக்கும் நிலை தொடர்கிறது. அதே போல் நகராட்சி மூலம் கட்டப்பட்ட இலவச கழிப்பிடம் சரியான பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு சிலர் கழிப்பிடத்தை உபயோகிக்காமல் திறந்தவெளியில் கழிக்கின்றனர்.

இதனால் சுகாதாரக்கேடு ஏற்ப்பட்டு நோய் பரவும் அவலம் உள்ளது. சமீபத்தில் நகராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதுவும் பயன்பாடு இன்றி சேதமடைந்த நிலையில் உள்ளது.

நகராட்சி நிர்வாகம் பயணிகளுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதி செய்து, தினம்தோறும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பயனற்றுள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து மீண்டும் பயன்பாடிற்கு கொண்டுவர வேண்டும். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் குப்பை கொட்டும் கடைகாரர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும், என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement