Load Image
Advertisement

தலையாரிகள் தேர்வில் சிபாரிசுகளுக்கு இடமில்லை என ஆளுங்கட்சியினர் குமுறல்

Tamil News
ADVERTISEMENT
மதுரை மாவட்டத்தின் 11 தாலுகாக்களிலும் 219 கிராம உதவியாளர்கள் (தலையாரிகள்) காலிப்பணியிடங்களில் பணிநியமனம் செய்யும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் நடந்தது. 13 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். கடந்த டிசம்பரில் எழுத்துத் தேர்வும், டிச.22 முதல் ஜன. 10 வரை நேர்முகத் தேர்வும் நடந்தது.

இதையடுத்து ஆளும்கட்சியில் தலையாரிகள் நியமனத்தை முழுமையாக கையில் எடுத்து செயல்படுத்த முனைந்தனர். ஒரு பணியிடத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வசூல் வேட்டையும் நடந்தது. பணிநியமனத்தில் ஆளும்கட்சி பிரமுகர்களின் தலையீடு அதிகளவில் இருந்ததாக செய்தி பரவியது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், முறையாக தேர்வு நடத்தவில்லையெனில் வருவாய் அதிகாிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என எச்சரித்தார்.

நேர்முகத் தேர்வில் தேர்வானோர் பட்டியலை தனது பார்வைக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். தேர்வு பட்டியல் குறித்து கடும் பரிசீலனை நடந்தது.

மற்ற மாவட்டங்களில் தேர்வு பட்டியல் வெளியிட்ட நிலையில் மதுரையில் தாமதமானது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் திடீரென இணையதளத்தில் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 219 பணியிடங்களுக்கு 202 பேர் பட்டியல் வெளியானது.

இதன்படி மதுரை வடக்கு தாலுகாவில் 18 பேர், தெற்கில் 9 பேர், மேலுாரில் 39, வாடிப்பட்டியில் 32, கிழக்கு தாலுகாவில் 17, மேற்கில் 3, திருப்பரங்குன்றம் 6, உசிலம்பட்டி 21, பேரையூர் 15, திருமங்கலம் 15, கள்ளிக்குடியில் 27 பேர் என 202 பேர் பட்டியல் வெளியானது.

சில தாலுகாக்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, தியாகிகள் வாரிசு, மொழிப்போர் தியாகிகள் போன்ற முன்னுரிமை பட்டியலில் ஆட்கள் இல்லாததால் அடுத்த நிலையில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதுகுறித்த தேர்வு பட்டியல் வரும் நாட்களில் வெளியாகும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

தலையாரிகள் பட்டியலில் ஆளும் தரப்பினர் பரிந்துரைத்தோர் பெயரும் சில தாலுகாக்களில் இடம் பெற்றுள்ளது.

அங்கு பணம் பெற்றோருக்கு முதலிலேயே நல்ல மதிப்பெண் அளித்து கைதுாக்கி விட்டுள்ளதாக வருவாய் ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கட்சியினரோ, ஏராளமானோரிடம் பணம் பெற்றுள்ளதால் தங்களுடைய பல சிபாரிசுகளுக்கு பட்டியலில் இடமில்லை என மனம் குமுறுகின்றனர். இதனால் வரும் நாட்களில் பூகம்பம் கிளம்ப வாய்ப்புள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement