ADVERTISEMENT
ராமநாதபுரம்--கோவை ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் மாதிரி சிலை ரதம் ராமநாதபுரத்திற்கு வருகை தந்து, கிராமங்தோறும் பவனி நடந்தது.
கோவை ஈஷா யோக மையத்தில் 112 அடியில் ஆதியோகி சிவன் சிலை அமைந்துள்ளது. அதுபோன்ற மாதிரி சிலை ரத பவனியாக தமிழகமெங்கும் கொண்டு செல்கின்றனர்.
பிப்.18ல் மகா சிவராத்திரி ஈஷா மையத்தில் கொண்டாடப்படும். இரவு முழுவதும் விழித்திருந்து தியானம், உலகப்புகழ் பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடக்கும். அதற்கு பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்கும் விதமாக ரத யாத்திரை நடக்கிறது.
ரத யாத்திரையில் உடன் வரும் ஈஷா தன்னார்வ தொண்டர்கள் பொதுமக்களுக்கு அழைப்பிதழ்களை கொடுத்தனர். ராமநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் ரதயாத்திரை சென்றது.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!