Load Image
Advertisement

வாயுத்தொல்லை நீங்க பபுள் டீ குடிங்க..!

Drink bubble tea to get rid of gas..!   வாயுத்தொல்லை நீங்க பபுள் டீ குடிங்க..!
ADVERTISEMENT
தைவானின் புகழ்பெற்ற பானங்களில் ஒன்று பபுள் டீ. 1980களில் உருவான பபுள் டீ, கடந்த சில ஆண்டுகளில் மேற்கு, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் பிரபலமான பானமாக மாறியுள்ளது. பபுள் டீ செய்முறை குறித்துப் பார்ப்போமா?

தேவையான பொருட்கள்

சாக்லேட் அல்லது ஏதாவதொரு ஃபிளேவர் கொண்ட அரை கிளாஸ் பால்

டாபியோகா விதைகள்

வெல்லத்தூள்

தேன் அல்லது மேப்பில் சிரப்

ஐஸ் கட்டிகள்

டீத்தூள்

தண்ணீர்


எவ்வாறு செய்வது?

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பபுள் டீ, தற்போது உலகின் பல நாடுகளில் கிடைக்கிறது. சில கடைகளில் இவற்றில் இனிப்புச் சுவைக்காக அதிகளவு வெள்ளைச் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. நாம் வீட்டில் செய்யும் பபுள் டீயில் சர்க்கரைக்கு பதிலாக தேன் அல்லது நாட்டு வெல்லப் பொடி சேர்த்துக்கொள்ளலாம்.

முதலில் டாபியோகா விதைகளை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். மிருதுவான இந்த விதைகளை வடிகட்டி சாதாரண தண்ணீர் ஊற்றி குளிர்விக்கவும். பின்னர் அரை கப் தண்ணீரை பாத்திரம் ஒன்றில் ஊற்றி அடுப்பில் ஏற்றி அதில் வெல்லத்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். இப்போது கேரமல் போன்ற பொன்னிற வெல்ல நீர் கிடைக்கும். வேகவைத்த டாபியோகா விதைகளை இந்த வெல்ல நீரில் போட்டு 5 நிமிடங்கள் ஊறவைத்து நன்கு கலக்கி விடவும். இதனால் விதைகளில் இனிப்பு இறங்கிவிடும். இதனை தனியாக வைத்துக்கொள்ளவும்.

பின்னர் சூடான நீரில் தேவையான அளவு டீத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி பிளாக் டீ தயாரிக்கவும்.
ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் இனிப்பு தோய்ந்த விதைகளைப் போடவும். அதன்மீது ஐஸ் கட்டிகளைப் போடவும். அதன்மீது கொதிக்கவைத்து ஆற்றிய ஃபிளேவர் பாலை கால் டம்ளருக்கு ஊற்றவும். அதன்மீது சூடான பிளாக் டீயை ஊற்றவும். இப்போது கிளாஸின் கீழே விதைகள், இடையில் பால், மேலே பிளாக் டீ என மூன்று அடுக்குகள் தெரியும். இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். இந்த கிளாஸில் கண்ணாடி ஸ்ட்ரா போட்டுவிட்டால் சுவையான பபுள் டீ தயார்..!
Latest Tamil News
இனிப்பு, உவர்ப்பு, சூடு, குளிர்ச்சி கொண்ட இந்த பபுள் டீயை மாலை விருந்தினர்களுக்கு அளிக்கலாம். குழந்தைகளை அதிகம் கவரும் இந்த பபுள் டீயின் நிறம் மற்றும் சுவை அவர்களது உடலுக்கும் பலவித நன்மைகளைச் செய்கிறது. இது செரிமானத்தை எளிதாக்குவதுடன், வாயுத் தொல்லையையும் போக்குவது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (1)

  • K.V.K.SRIRAM - chennai,இந்தியா

    பபுள் டீ ரைட்டு.... அதுக்கு போட்ட படம்... ரொம்பத்தான் லொல்லு....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement