ராகுல் யாத்திரை இன்று நிறைவு: அதிக மக்கள் கூட்டம் வரும் என காங்., எதிர்பார்ப்பு
ஸ்ரீநகர்: காங்,., எம்.பி ராகுல் யாத்திரை இன்று(ஜன.,30) ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நிறைவு பெறுகிறது.

காங்., எம்.பி ராகுல், கடந்த செப்.,7 ம் தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை துவக்கினார். இதையடுத்து தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சலபிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு, யாத்திரை கடந்த 19ம் தேதி காஷ்மீர் வந்தடைந்தது. இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், இன்று யாத்திரை நிறைவடைகிறது.
நேற்று முன்தினம்(ஜன.,28) ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் நடந்த காங்., பாதயாத்திரையில், ராகுல் உடன் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி நடைப்பயணம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீநகரில் நேற்று(ஜன.,29) நடைப்பயணம் மீண்டும் துவங்கியது. அப்போது ராகுல் உடன் பிரியங்கா கலந்து கொண்டார். இதையடுத்து ராகுல் ஸ்ரீநகர் லால் சவுக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

இன்று ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ராகுல் நடைப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். அதன் பின்னர் எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. ராகுலின் பாத யாத்திரை நிறைவு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த கட்சி பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு விடுத்து, சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இன்று பொதுக்கூட்டத்தில், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனாவின் உத்தவ் தாக்ரே அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், கேரளா காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 12 எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. யாத்திரை நிறைவு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், நாளை ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும், பாத யாத்திரையிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவு விழாவின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (7)
அடுத்து பட்டாயா போவதற்கு டிக்கெட் போட்டாச்சா. 1 மாதம் ஒய்வு எடுக்க தான்
ராகுலும் என்ன என்ன செய்கிறான்... ஒன்னும் பருப்பு வேக வில்லை... கூட்டமெல்லாம் ஒட்டு இல்லை பப்பு காந்தியே. ஒரே ஒரு நாள் மக்களுக்கு உபயோகமாக இருங்க உங்க குடும்பத்தினர் எல்லோரும்.. என்றுமே காந்தி நேருக்கள் இந்தியாவிற்கு தேவையே இல்லாத ஆணிகள் தான். விளம்பர மோகத்தில் நாட்டை சின்னாபின்னம் செய்து குளிர் காயும் தேசதுரோகிகள்
Sad. Rahulji shall continue Yatra to PoK, Tibet, Aksai Chin and liberate these areas
ஜம்மு காஷ்மீரில் ஊர்வலத்தை முடிப்பது தவறான முடிவு. காங்கிரஸ ஏதோ ஒரு முடிவுடன் தான் இந்த ஏற்பாடு செய்திருக்கிறது இதில் ஏதோ சூழ்ச்சி செய்து அனுதாப ஓட்டு தேட பார்க்கிறாங்க என்பது உறுதி.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எட்டு வருஷத்துக்கு முன்னாடி இதெல்லாம் கனவுல கூட நினைச்சு பார்த்திருக்க முடியாதுபார்த்திருக்க முடியாது