Load Image
Advertisement

கைது செய்த போலீசை அவதூறாக திட்டி கோஷமிட்ட வி.சி.,வினர்: நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: போலீசார் குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

கைதுதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு புகாரில், ஆரணி போலீஸ் ஸ்டேசனுக்குள் புகுந்து சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் அவதூறாக பேசினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது போலீசாரின் கவனத்திற்கு செல்லவே, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது. இதனையடுத்து ஆதரவாளர்களோடு ஆரணிக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாஸ்கரன், போலீஸ் ஸ்டேசன் முன்பு தனது ஆதரவாளர்களால் புடைசூழ அழைத்து செல்லப்பட்டார். அப்போது, பாஸ்கரன் போலீசுக்கு எதிராக குரல் எழுப்ப, அவரது ஆதரவாளர்கள் அதனை பின்தொடர்ந்தனர். போலீசை, ஆபாசமாகவும், நாயுடன் ஒப்பிட்டும், எச்சரித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனை போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

கோஷம்இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், போலீசாரை மோசமாக விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது போலீஸ் தலைமையின் கவனத்திற்கு செல்லவே, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் அனுமதியில்லாமல் ஊர்வலம் நடத்தியது, போலீசுக்கு எதிராக கோஷமிட்டவர்கள் என 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வலியுறுத்தல்இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: போலீசார் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், "காவல் நாய்களே", "எச்சைப் பிழைப்பு", போன்ற கோஷங்களை எழுப்புவது காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை இது போன்ற அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.

Latest Tamil News

ஓரிரு போலீசார்கள் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டு மொத்த போலீசார்களையும் அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. தங்களது உயிரை துச்சமாகக் கருதி, மக்களைக் காக்க உழைக்கும் போலீஸ் துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும், இது போன்று அவதூறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

போலீசார்களை மன உறுதியை குறைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், போலீஸ் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வாசகர் கருத்து (18)

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது, மயான அமைதியாகிப்போனது எதிர்கட்சியர்களின் நிலைப்பாடு, தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பது கண்டு வியப்பாக இருக்கிறது, இவர்களது பிரநிதிகள் வந்து என்ன செய்யப்போகிறார்கள்? எல்லாவற்றிற்கும் அண்ணாமலை, ஜனநாயகத்தின் நிலை தனி மனிதன் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய நிலை, வந்தே மாதரம்

 • Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  VCK is எ third ரேட் party full ஒப்பி rogues. The best way to stop this nonsense is silently pick the leaders and supporters and thrash them in such a way they may not be able to express anything in future.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  வி.சி.க, என்பது தேச விரோத கட்சி, தமிழர் விரோத கட்சி. இதை தடை செய்வதே உத்தமம்.

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு . பொலிஸாரின் கைகளை முதல்வர் கட்டி போட்டிருப்பதால் விசையின் பாஸ்கரன் போன்றோரே ஆடுகின்றனர் , ஸ்டாலின் அந்த கட்டுகக்ளை அவிழ்த்து பார்க்கட்டும் , ஓட்டலில் எச்சை பிரியாணி தின்னும் தலைவன் உட்பட எல்லாம் உள்ளே

 • Vijay - Chennai,இந்தியா

  ஒற்றுமையில்லா ஹிந்துக்கள், குடிக்கு அடிமையான தமிழர்கள், பணம் வாங்கி ஒட்டு போடும் கும்பல், மதம் பார்த்து ஒட்டு போடும் மக்கள் இருக்கும் வரை திமுக தான் ஆட்சியில் இருக்கும். இது காலத்தின் சாபம்.... என்ன புலம்பி என்ன பயன், எவ்வளவு அசிங்கபட்டலும் அவமானப்பட்டாலும், ஏமாற்றபட்டாலும் திமுகவுக்கு தான் ஓட்டை நொட்டுவான் முட்டாள் தமிழன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement