Load Image
Advertisement

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒடிசா சுகாதார அமைச்சர் காலமானார்

Odisha Health Minister Naba Das shot in chest as cop opens fire, hospitalised துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒடிசா சுகாதார அமைச்சர் காலமானார்
ADVERTISEMENT
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் படுகாயம் அடைந்து சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று இரவு உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியது உதவி எஸ்ஐ என தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் நபா தாஸ். இவர், ஜர்சுகுடா மாவட்டத்தில் உள்ள பரஜராஜ்நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். காந்தி சவுக் பகுதியில் காரில் இருந்து இறங்கிய நபா தாசை, அருகில் இருந்த போலீஸ் சீருடையில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில், மார்பில் குண்டு பாய்ந்த நிலையில், நபா தாஸ், மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக தலைநகர் ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு இரவு அவர் உயிரிழந்தார்.

Latest Tamil News

துப்பாக்கிச்சூடு நடத்தியது உதவி எஸ்ஐ ஆக இருக்கும் கோபால் தாஸ் என விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அவரை பிடித்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்