Load Image
Advertisement

பெண்களின் உரிமையை மற்றவர்கள் தீர்மானிக்கின்றனர்

Others decide womens rights Kanimozhi MP, speech   பெண்களின் உரிமையை மற்றவர்கள் தீர்மானிக்கின்றனர்
ADVERTISEMENT
மதுரை : ''பெண்களின் உரிமையை மற்றவர்கள் தீர்மானிக்கும் நிலை உள்ளது. இதை மாற்ற வேண்டிய நிலை அனைவருக்கும் உள்ளது'' என மதுரை யாதவா பெண்கள் கல்லுாரியின் 37 வது பட்டமளிப்பு விழாவில் கனிமொழி எம்.பி., பேசினார்.

முதல்வர் (பொறுப்பு) புஷ்பலதா வரவேற்றார். பட்டங்களை வழங்கி கனிமொழி பேசியதாவது: பட்டம் பெறுவது வாழ்வில் மறக்க முடியாத தருணம். பெண்கள் கல்வி கற்கக்கூடாது என ஒரு காலத்தில் உலகமே ஒன்றிணைந்து நின்றது. கல்வி, வேலைவாய்ப்பு, வாக்குரிமையை பெண்கள் போராடி பெற்றனர்.

அவர்களின் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. இன்னும் உரிமையை முழுமையாக பெறவில்லை. உரிமையை மற்றவர்கள் தீர்மானிக்கும் நிலை உள்ளது. இதை மாற்ற வேண்டிய நிலை அனைவருக்கும் உண்டு.

அரசு பணியில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீட்டை கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவந்தார். தற்போது 40 சதவீதமாக முதல்வர் ஸ்டாலின் உயர்த்தியுள்ளார். ஒரு கட்டத்திற்குள் பெண்கள் அடைபடாமல் எண்ணம், இலக்கை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும், என்றார்.

அமைச்சர் மூர்த்தி, அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன், மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, கல்லுாரி தலைவர் அருண்போத்திராஜ், செயலாளர் இந்திராணி பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (17)

  • Viswam - Mumbai,இந்தியா

    நல்லா சொல்லிச்சு கனிஅக்ஸ்

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    உண்மை அப்பன் சொத்து பிழைகள் எல்லோருக்கும் சமம் ,சூசை தீயமுக கம்பெனியை மொத்தம ஆட்டைய போட்டுட்டாரு ,அக்காவுக்கு ஒண்ணுமே இல்ல

  • ranjani - san diego,யூ.எஸ்.ஏ

    இது சுடாலின் மீதுள்ள வெறுப்பினால் வந்தது போல் உள்ளது.

  • raja - Doha,கத்தார்

    அத உன் கச்சி காரனிடம் கேளும்மா ஏன் பொது வெளியில் கூறுகிறாய்??? வாழும் கண்ணகியே போன தேர்தலப்ப இளம் விதவைகள் அதிகம் வாழும் மாநிலம் தழ்நாடுதான் என்று கூவுனியே இப்போ அது குறைந்துவிட்டதா???? நீயெல்லாம் பெண் சுதந்திரம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது முட்டாள்களும் உங்களை நம்பி ஒட்டு வேற போடுறாங்க இந்த தமிழ் திராவிடியார்கள்

  • Visu - chennai,இந்தியா

    பல்கலைகழக நுழைவுத்தேர்வுக்கு தடை விதித்துள்ள தாலிபான் அரசை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தை தங்கள் தலைமையில் நடத்துவீர்கள் என எதிர்பார்க்கிறோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்