Load Image
Advertisement

மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு: பிப்.1ல் வேலூரில் துவக்கம்



சென்னை,-'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை, பிப்ரவரி மாதம் துவக்கி வைத்து, பிப்., 1, 2 தேதிகளில், வேலுார் மண்டலத்தில், முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.
Latest Tamil News

கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை, அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களில், முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.

அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், 'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள், துறைத் தலைவர்களுடன் சென்று, மாவட்டங்களில் நிர்வாக மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
Latest Tamil News
முதலாவதாக, பிப்., 1, 2 ஆகிய தேததிகளில், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களில், ஆய்வு செய்ய உள்ளார்.

குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்; வருவாய் துறை சேவைகள்; சாலை மேம்பாடு; கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து என, துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றின் பயன்கள் குறித்து, ஆய்வு செய்ய உள்ளார்.

ஆய்வின் முதல் நாளான பிப்., 1ல், அப்பகுதிகளில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகள், சுய உதவிக் குழுக்கள், தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும், கோரிக்கைகளை கேட்டறிய உள்ளார்.

அன்று மாலை, நான்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள், டி.ஐ.ஜி., - ஐ.ஜி., ஆகியோருடன், அந்த மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு மேற்கொள்வார்.

ஆய்வின் மற்றொரு பகுதியாக, அமைச்சர்கள், அரசு செயலர்கள், துறைத் தலைவர்கள், நான்கு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்வர்.

கள ஆய்வில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், திட்ட செயல்பாடுகள் குறித்து, பிப்., 2ம் தேதி மாவட்ட கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர் முன்னிலையில் விவாதிக்கப்படும்.

தலைமைச் செயலர், முக்கியத் துறை செயலர்கள் மற்றும் அரசுத் துறை தலைவர்கள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட மாவட்ட உயர் அலுவலர்களுடன், முதல்வர் விரிவான ஆய்வு மேற்கொள்வார் என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (5)

  • ஆரூர் ரங் -

    எந்தெந்த ஊருல எத்தனை பேர் திமுக சார்பு கல்லெறியும் நிபுணர்கள் என்று கள ஆய்வு நடத்துங்க.

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    'கள ஆய்வில் முதல்வர்'... ஆய்வுக்கு தேவையான எஸ் ஓ பி, மற்றும் செக்லிஸ்ட் இவை தயாரா ? அப்படி இல்லை என்றாலும் இவை குறித்த புரிதல் முதல்வருக்கு உண்டா ?

  • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

    உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டமும் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டமும் குற்றவாளிகள் நிறைந்த அரசு அதிகார அமைப்பால் நீர்த்து போனது.இப்போது கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டமும் அதே அதிகார அமைப்பை வைத்தே அறிவிக்கப் பட்டுள்ளது.இந்த திட்டமும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்காது என்பது திண்ணம்.

  • ram -

    ஐயா.. நீங்க முதல் காரியமாக ஒன்னு பன்னுங்க.. தேர்தலப்போ ஒவ்வொரு கிராமமாக கிராம சேவைக் கூட்டம் என ஒன்று நடத்தி அதிலே வாக்குறுதி கொடுத்து மணுக்களெல்லாம் வாங்கிட்டு போனிங்களே ... அதையெல்லாம் போறவழியே தூக்கி குப்பையிலே வீசிட்டிங்களா இல்லே.. அலுவலகத்துலே குப்பையோட குப்பையா போட்டுட்டீங்களா... அந்த அறியா மக்கள் நீங்க நல்லது பன்னுவீங்கன்னு நம்பி உங்கக்கிட்டே கொடுத்த மணுக்களை சரிபன்னுனாலே பல பிரச்சனைகள் மக்களுக்கு தீரும். அதை விட்டு ஏன் மறுபடியும் ஊரைசுத்தி மக்களை ஏமாத்த மறுபடியு கிளம்பிட்டீங்க.. மக்கள் பணத்தை வீனடிக்கவா... Smart ஆ வேலை செய்யிங்க முதல்வரே..

  • Khan - Chennai,இந்தியா

    Good tem. .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்