ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படுகின்றன. அவை குறிப்பிட்ட எடையில் மட்டும் வழங்கப்படுகின்றன.
கேழ்வரகு, கம்பு
கட்டுப்பாடற்ற பிரிவில் மளிகை, சமையல் எண்ணெய் போன்றவை விற்கப்படுகின்றன. அவற்றை கார்டுதாரர்கள் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் வாங்கலாம்.
வரவேற்பு
முதல்கட்டமாக, சென்னை, கோவையில் உள்ள முக்கிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்க, அரசு அனுமதி அளித்து உள்ளது.
தற்போது, தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது.
இதற்கு கார்டுதாரர்களிடம், நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
மத்திய அரசு இந்த ஆண்டை, சிறுதானியங்களுக்கான ஆண்டாக அறிவித்து, அவற்றை பயன்படுத்துமாறு, மக்களை அறிவுறுத்தி உள்ளது.
எனவே, அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் சிறு தானியங்களை விற்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு, தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் என தெரிகிறது. மார்ச்சில் இருந்து ரேஷனில் சிறுதானியங்களின் விற்பனை துவங்கும்.
அவற்றை குறைந்த விலைக்கு விற்கலாமா? அல்லது இலவசமாக வழங்கலாமா? என்பது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.
ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கினால் குப்பைக்கு செல்ல வேண்டிய தானியங்களையும் மக்கள் முண்டியடித்து வாங்குவர். விலை நிர்ணயம் செய்தால் தரமான பொருளாக இருந்தாலும் தரமற்ற பொருளாக இருப்பதாக அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்.