Load Image
Advertisement

காங்கிரசுக்கு கமல் ஆதரவு: கட்சியில் கடும் எதிர்ப்பு!

இடைத்தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் ஆதரவு அளித்துள்ளதால், மக்கள் நீதி மய்யம் கட்சி காணாமல் போகும் நிலை உருவாகியுள்ளதாக, அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.
Latest Tamil News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இளங்கோவனுக்கு, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு தெரிவித்து, பிரசாரத்திலும் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

'கட்சியின் செயற்குழுவில் ஒருமித்த கருத்துடன் எடுத்த முடிவு' என கமல் கூறினாலும், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கமல் கட்சியினர், 'போஸ்டர்' ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்திலேயே, 'கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸ் உடன் கமல் சேருகிறார்' என்ற தகவலையும் பரப்பி விட்டனர்.

மேலும், கமலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்'களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, அதிருப்தியாளர்கள் கூறியதாவது:

சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, துணை தலைவர் மகேந்திரன் தி.மு.க.,வுக்கு தாவினார். அப்போது ஆவேசமடைந்த கமல், தற்போது மகேந்திரன் எடுத்த முடிவையே எடுத்துள்ளார்.

அவர் போன போதே சென்றிருந்தால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிலரை வெற்றி பெற வைத்திருக்கலாம்.
Latest Tamil News
கடந்தாண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திருப்பூர் மாநகராட்சியின் 36வது வார்டில் போட்டியிட்ட மய்யம் வேட்பாளர் மணி, தேர்தல் செலவுக்காக, 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.

தீவிர பிரசாரம் செய்தும் அவருக்கு கிடைத்தது 44 ஓட்டுகள் மட்டுமே. அந்த வார்டில் உள்ள கட்சி உறுப்பினர்களும், கமல் ரசிகர்களும் கூட ஓட்டு போடவில்லை. இந்த நிலையில் தான் கட்சி உள்ளது.

தேர்தலில் போட்டியிடாத நிலையில், இடைத்தேர்தல் பொறுப்பாளரை கமல் நியமித்துள்ளது கேலிக்குரியதாக உள்ளது.


இவ்வாறு அவர்கள் கூறினர்

- நமது நிருபர் -.


வாசகர் கருத்து (18)

  • theruvasagan -

    வீட்டு சாக்கடை பாதாள சாக்கடையில் கலந்தால் சாக்கடை நாற்றம் சந்தன வாசனை ஆக மாறி விடுமா

  • Sukumar R -

    முக போய்விட்டதால், இனி வரும் காலங்களில் சட்டசபையில் சிறிதே வாய்ப்பு இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கலாம். அப்படி கேட்கும்போது கொடுப்பதற்கு பசையுள்ள ஆள் வேண்டுமே கொடுப்பதற்கு. இல்லேன்னா கட்சிக்கு காலம் காலமாய் விசுவாசமாக இருந்த வேற்று ஆசாமிகளுக்கு அல்லவா கொடுக்க வேண்டியது வரும்.

  • sankar - Nellai,இந்தியா

    ilangai thamilanai kondra katchikku aatharavu - sabaash

  • ஆக .. - Chennai ,இந்தியா

    ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில் பாவம் ராகுலயே

  • பேசும் தமிழன் -

    அந்த கட்சியில் யார் இருக்கிறார்கள் எதிர்ப்பு தெரிவிக்க .... ஏற்கெனவே அந்த கூடாரம் யாரும் இல்லாமல் காலியாகி கிடக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்