ADVERTISEMENT
புதுச்சேரி: புதுச்சேரியில் பிப்., 1ம் தேதி பாரம்பரிய திருவிழா துவங்குகிறது.
புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் சதீஷ் நல்லாம், பாண்டி கேன் அமைப்பு உறுப்பினர் காகோலி பானர்ஜி, இன்டாக் ஒருங்கிணைப்பாளர் அருள், அரபிந்தோ சொசைட்டி கிேஷார்குமார், புதுச்சேரி கிராப்ட் கவுன்சில் செயலாளர் சித்தாரா ஆகியோர் கூறியதாவது:
புதுச்சேரியில் 9வது பாரம்பரிய திருவிழா வரும் 1ம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது. இந்தாண்டு திருவிழா 'நமது சுற்றுலா' என்ற தலைப்பில் சுற்றுலாவில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதில், புதுச்சேரியின் உள்ளூர் சமூகங்கள், சுற்றுலாத்துறை, ஒத்துழைப்பாளர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கான தொடர் முயற்சிகளுடன் துவங்குகிறது.
நமது சுற்றுலா குறித்த சிறப்பு வட்ட மேசையோடு இந்நிகழ்ச்சி முடிகிறது. வரும் 1ம் தேதி அலையன்ஸ் பிரான்சிசில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியுடன் விழா துவங்குகிறது.
வரும் 7ம் தேதி காமராஜர் மணி மண்டபத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலக்கியம், நுண்கலை போட்டியும், தனியார் பள்ளியில் இயற்கை பயிற்சி பட்டறையும் நடக்கிறது.
வரும்8ம் தேதி, புகைப்படம் மற்றும் குறும் படம் போட்டி, 10ம் தேதி கடற்கரை சாலை காந்தி திடலில் கிராப்ட் பஜார் நடக்கிறது.
தொடர்ந்து 15ம் தேதி வரை குழந்தைகள் மிதிவண்டி சுற்று பயணங்கள், உணவு நடைப்பயணம், நடனம், இசைக்கருவி வாசித்தல், கோலம், சிலம்பம், புகைப்பட கண்காட்சி உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!